சுவையான, தரமான உணவு தயாரிக்க அம்மா உணவக ஊழியர்களுக்கு பயிற்சி தமிழக முதல்வர் உத்தரவு எதிரொலி
கோவை: அம்மா உணவகங்களை சீரமைத்து, சுவையான, தரமான உணவு வழங்க முதல்வர் விஜய் உத்தரவிட்டதையடுத்து, கோவையில் உள்ள 12 அம்மா உணவக ஊழியர்களுக்கு நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது.
உணவு பாதுகாப்பு துறை மூலம் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. டவுன்ஹால் அலுவலகத்தில் கமிஷனர் சிவகுரு பிரபாகரன் பயிற்சியை நேற்று துவக்கி வைத்தார்.
சுகாதாரமாக உணவு தயாரித்தல், வளாகத்தை சுத்தமாக பராமரித்தல், உணவு பரிமாறும் முறை, மளிகை, காய்கறி உள்ளிட்டவற்றை பாதுகாப்பது, கலப்பட பொருட்களை கண்டறிவது, சுகாதாரமான குடிநீர் வழங்குவது குறித்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.
உணவு பாதுகாப்பு துறை பயிற்சியாளர் கார்த்தி பேசியதாவது: கொடி காய்கறியை உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். காய்கறியை அரைத்து தோசை மாவில் கலந்து, கலர் தோசையாக சுட்டு சாப்பிடலாம். புதினா இலை சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.
மருந்துக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் உணவுக்கு இப்போது தரப்படுகிறது. எண்ணெய், உப்பு, சர்க்கரையை குறைவாக எடுத்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில், கொழுப்பு அதிகமாகி விடும்.
கலப்படம் இல்லாத பொருட்களா என்பதையும், உணவு பாதுகாப்பு துறை முத்திரை இருக்கிறதா எனவும் பார்க்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.
மேலும்
-
விஜயை அவதுாறாக பேசியதால் ரயிலை நிறுத்தி தொழிலாளி ரகளை
-
ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கிய இணை இயக்குநர் 'சஸ்பெண்ட்'
-
போலீஸ்காரரை தாக்கிய வாலிபருக்கு சிறை
-
திருச்செந்துார் கோவிலில் ரூ.25 லட்சம் மோசடி அறநிலையத்துறை பெண் ஊழியர் 'சஸ்பெண்ட்'
-
டவுன் பஞ்., தலைவிக்கு கணவர் 'வாய்ஸ்'
-
வானில் பயங்கர வெடிச்சத்தம் ஆடு, மாடுகள் அலறி ஓட்டம்