போலீஸ்காரரை தாக்கிய வாலிபருக்கு சிறை

துாத்துக்குடி: துாத்துக்குடி மாவட்டம், ஏரலை சேர்ந்த பெருமாள் பாஸ்கர், 34; திருச்செந்துார் கோவில் காவல் நிலைய ஏட்டு.

கோவில் வளாகத்தில் தகராறு செய்து கொண்டிருந்த தம்பதியிடம், போ தையில் வந்த வாலிபர், தன்னை போலீஸ் என அறிமுகம் செய்து தம்பதியை மிரட்டினார். அவரை பெருமாள் பாஸ்கர் தட்டி கேட்டார்.

அந்த வாலிபர், செங்கல்லால் பெருமாள் பாஸ்கரை தாக்கினார். திருச்செந்துார் அரசு மருத்துவமனையில் ஏட்டு சேர்க்கப்பட்டார். ஏட்டை தாக்கிய நபர் வடக்கூர் பகுதியைச் சேர்ந்த விஜயன், 32, என தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement