விஜயை அவதுாறாக பேசியதால் ரயிலை நிறுத்தி தொழிலாளி ரகளை
கண்ணமங்கலம்: மு தல்வர் விஜயை அவதுாறாக பேசியதால், ஆத்திரத்தில் ரயிலில் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து, தொழிலாளி ரகளையில் ஈடுபட்டார்.
தஞ்சாவூரை சேர்ந்தவர், 39 வயது மதிக்கத்தக்க தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மதியம், 2:00 மணிக்கு புதுச்சேரியில் இருந்து புறப்பட்டு, திருவண்ணாமலை, காட்பாடி வழியாக செல்லும் ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தார்.
அவர், மது போதையில் இருந்தார். ரயில், திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அருகே மாலை, 5:00 மணியளவில் சென்றபோது அவர், திடீரென அபாய சங்கிலியை பிடித்து இழுத்தார்.
இதில், ரயில் நடுவழியில் நின்றது. கீழே இறங்கிய அவர், ரயில் ஜன்னல் கண்ணாடி மீது, கல்லை வீசியதில், கண்ணாடி நொறுங்கியது.
இதை பார்த்த இன்ஜின் டிரைவர், கார்டு ஆகியோர் அவரை மடக்கி பிடித்து, காட்பாடி ரயில்வே போலீசில் ஒப்படைத்தனர்.
அந்த தொழிலாளி கூறுகையில், 'நான் பயணம் செய்த பெட்டியில், சிலர் தமிழக முதல்-வர் விஜயை கிண்டலடித்தனர். அந்த ஆத்திரத்தில், அபாய சங்கிலியை பிடித்து இழுத்தேன்' என்றார்.
மேலும்
-
சட்டவிரோத ஊடுருவல்காரர்கள் இந்தியாவிலிருந்து வெளியேற்றப்படுவார்கள்: அமித்ஷா உறுதி
-
மதம் மாற்றப்பட்டு ஏமாற்றப்பட்ட பெண்ணுக்கு அநீதி; அத்துமீறிய போலீசுக்கு சரியான தண்டனை
-
288 பேரை உயிர்பலி வாங்கிய விபத்து; விமான நிறுவனங்களுக்கு ரூ.720 கோடி அபராதம் விதிப்பு
-
பிரதமர் மோடி - சைப்ரஸ் அதிபர் நிகோஸ் கிறிஸ்டோடோலிடிஸ் சந்திப்பு
-
அடுத்த வாரம் டில்லி செல்கிறார் முதல்வர் விஜய்!
-
சொல்கிறார்கள் –––––––––– சுகாதாரமும் வருமானமும் தரும் ‘வெண்டை’ சாகுபடி