வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படுகிறதா துணை கமிஷனர்கள் குழு கண்காணிப்பு
கோவை: கோவை மாநகரில் டெலிவரி நிறுவனங்கள் மற்றும் மேன் பவர் ஏஜென்சிகள் மீது போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். சமீபத்தில் மாநகர போலீஸ் கமிஷனர் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களின் அடிப்படையில் நிறுவனங்கள் செயல்படுகின்றனவா என்பதை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
இதற்காக வடக்கு மற்றும் தெற்கு துணை கமிஷனர்கள் தலைமையில் சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. டெலிவரி பணியாளர்கள் மற்றும் தனியார் பாதுகாப்பு பணியாளர்கள் குறித்த விவரங்கள் முறையாக சேகரிக்கப்படுகிறதா, நிறுவனங்கள் காவல்துறை வழிகாட்டுதல்களை பின்பற்றுகிறதா என்பதையும் போலீசார் தொடர்ந்து ஆய்வு செய்ய உள்ளனர்.
அதேபோல், மேன் பவர் ஏஜென்சிகள் மற்றும் டெலிவரி நிறுவனங்கள் புதிய பணியாளர்களை நியமிக்கும் போது கட்டாயமாக பின்பற்ற வேண்டிய விரிவான 'செக் லிஸ்ட்' ஒன்றையும் காவல்துறை தயாரித்து வருகிறது.
இந்நிறுவனங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், குறிப்பிட்ட காலஅவகாசத்திற்கு பின்னர்,அவை பொருத்தப்பட்டுள்ளனவா என்பதையும் போலீசார் நேரில் ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளனர். கேமரா பதிவுகளை குறிப்பிட்ட நாட்கள் வரை சேமித்து வைப்பதற்கான வசதிகளையும் ஏற்படுத்திக்கொள்ளவேண்டும்.
விதிமுறைகளை பின்பற்ற தவறும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், நகரின் பாதுகாப்பை உறுதி செய்வதில் தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
மேலும்
-
ஆப்ரிக்காவில் 'எபோலா' வைரஸ் கர்நாடக சுகாதாரத்துறை 'அலெர்ட்'
-
சிவானந்த் நீலண்ணனவரின் ரூ.250 கோடி முடக்கம் குத்தாட்ட நடிகை சன்னி லியோனுக்கு ரூ.ஒரு கோடி கொடுத்தது அம்பலம்
-
நீட் தேர்வு வேண்டாம் முதல்வர் சித்து விருப்பம்
-
ஆபத்தான நிலையில் சுற்றுச்சுவர் புதுப்பிக்க எம்.எல்.ஏ., நடவடிக்கை
-
சக்ரேபைலு யானைகள் முகாமில் சுற்றுலா பயணியருக்கு தடை
-
சட்டவிரோத குவாரியில் பாறைகள் தகர்ப்பு போவி அபிவிருத்தி குழும தலைவர் கண்டனம்