அரசு மருத்துவமனை செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிப்பு
பந்தலுார்: பந்தலுார் இரும்பு பாலம் பகுதியில் நுகர் பொருள் வாணிபக்கிடங்கு செயல்பட்டு வருகிறது. இந்த பகுதிக்கு செல்லும் குறுகலான சாலையை, அகலப்படுத்தாத நிலையில் நாள்தோறும் இந்த சாலையில், அரிசி உள்ளிட்ட உணவு பொருட்கள் ஏற்றி செல்லும் லாரிகள், மேட்டுப்பாங்கான பகுதியில் அடிக்கடி நின்று விடுகிறது.
இதனால், மருத்துவமனைக்கு செல்லும், 108 உள்ளிட்ட ஆம்புலன்ஸ் வாகனங்கள், நகராட்சி அலுவலகம், நீதிமன்றம், கிராம பகுதிக்கு வாகனங்கள் செல்ல முடியாத நிலை தொடர்கிறது.
இந்த சாலையை அகலப்படுத்த மக்கள் வலியுறுத்தினர். ஆனால், தேர்தலை காரணம் காட்டி அவசரகதியில், கிடங்கு திறக்கப்பட்டதால் தற்போது நோயாளிகளும், பொதுமக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, இந்த சாலையை உடனடியாக அகலப்படுத்தி சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
விவசாயி தற்கொலை
-
பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில் வசந்த உற்சவம் இன்று துவக்கம்
-
எஸ்.ஆர்.எம்., முத்தமிழ் மேல்நிலை பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி சாதனை
-
தாகூர் மெட்ரிக் பள்ளி மாணவி மாநில அளவில் சாதனை
-
வேலை நிறுத்த உரிமை பாதுகாப்பு சர்வதேச நீதிமன்றம் முக்கிய உத்தரவு
-
ஏர்போர்ட்டில் 'ஏர் இந்தியா' விமானம் விபத்தில் சிக்கியது; 181 பேர் தப்பினர்
Advertisement
Advertisement