தாகூர் மெட்ரிக் பள்ளி மாணவி மாநில அளவில் சாதனை
புதுச்சேரி: சேலம் மாவட்டம், தலைவாசல் வட்டம், தேவியாக்குறிச்சி, தாகூர் மெட்ரிக் மேல்நிலை பள்ளி மாணவர்கள், 10ம் வகுப்பு தேர்வில் மாநில அளவிலான சாதனை படைத்துள்ளனர்.
பள்ளி மாணவி ஸ்ரீதன்யா தேர்வில் 500க்கு 499 மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதல் இடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
மாணவிகள் அஷ்தா, நிஷா, சஷ்மிதா ஆகியோர் 498 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடம், மாணவிகள் சியாமளாதேவி, தர்ஷினி, பிரகல்யா, ஸ்ரீமதி, சுபாஷினி ஆகியோர் 496 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம் பிடித்தனர்.
பாடவாரியாக ஆங்கிலத்தில் 4 பேர், கணிதத்தில் 8, அறிவியலில் 69, சமூக அறிவியலில் 14 பேர் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். சாதனை மாணவர்களை தாகூர் கல்வி குழுமத்தின் தலைவர் முத்துசாமி, செயலர் மணிகண்டன், பொருளாளர் காளியண்ணன், இணை செயலர் அருண்குமார், கல்வி குழு இயக்குனர்கள் சண்முகம், செல்வம், ராஜமாணிக்கம், சிலம்பரசன், பள்ளியின் முதல்வர் சரவணன் மற்றும் பொறுப்பாசிரியர்கள் சால்வை அணிவித்து பாராட்டினர்.
மேலும்
-
கடலாடியில் இரவு நேர டாக்டர்கள் இல்லாததால் நோயாளிகள் அவதி திறப்பு விழாவிற்கு காத்திருக்கும் புதிய கட்டடம்
-
ஐ.டி.ஐ.,வளாகத்தேர்வு
-
விலை கிடைப்பதால் திராட்சை வாழை சாகுபடி பரப்பு அதிகரிப்பு
-
சூரிய, காற்றாலை மின் உற்பத்தி திறன் அதிகரிப்பு; மோடி தலைமைக்கு கமல் பாராட்டு
-
பெண்களை இழிவுபடுத்தி திமுக எம்பி ஆ.ராஜா சர்ச்சை பதிவு; குவியும் கண்டனங்கள்
-
60 நாட்களில் மிகப்பெரிய நிர்வாக மாற்றம்; சொல்கிறார் அமைச்சர் ஆதவ்