எஸ்.ஆர்.எம்., முத்தமிழ் மேல்நிலை பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி சாதனை
சேலம்: சேலம் பெரியேரி எஸ்.ஆர்.எம்., முத்தமிழ் மேல்நிலைப் பள்ளி பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.
பள்ளி மாணவி சிவநந்தினி பத்தாம் வகுப்பு தேர்வில் 500க்கு 498 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் சிறப்பிடம், பள்ளியளவில் முதலிடம் பெற்றார். மாணவி அட்சயா 495, மதிப்பெண் பெற்று இரண்டாமிடம், மாணவர் லோகேஷ் 494 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம் பிடித்தனர்.
பாடவாரியாக கணித பாடத்தில் 8 மாணவர்களும், அறிவியல் பாடத்தில் 12, சமூக அறிவியல் பாடத்தில் ஒரு மாணவரும் 100க்கு 100 மதிப்பெண் பெற்று சாதனை புரிந்துள்ளனர். 450 மதிப்பெண்களுக்கு மேல் 58 மாணவர்கள், 400 மதிப்பெண்களுக்கு மேல் 115 மாணவர்கள் பெற்றனர்.
பிளஸ் 2 பொதுத்தேர்வில் இப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. மாணவர் கோபிநாத் 600க்கு 595 மதிப்பெண் பெற்று சேலம் கிழக்கு மாவட்ட அளவில் இரண்டாமிடம், பள்ளியளவில் முதலிடம் பிடித்தார்.
மாணவி ஜோஷிகா 592 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம், மாணவிகள் தெய்வதர்ஷனி, சுபஸ்ரீ ஆகியோர் 590 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடம் பிடித்தனர். பாடவாரியாக தமிழ், வேதியியல், கணிதம் பாடத்தில் தலா ஒரு மாணவர், உயிரியல் பாடத்தில் 2, கணினி அறிவியல் பாடத்தில் 2, கணக்குப்பதிவியல் பாடத்தில் 2, கணினி பயன்பாடுகள் பாடத்தில் 5 பேரும் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை புரிந்துள்ளனர். 500 மதிப்பெண்களுக்கு மேல் 79 மாணவர்கள் பெற்றுள்ளனர்.
பள்ளியில் சாதனை படைத்த மாணவர்கள், அவர்களுக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களுக்கு பள்ளியின் தலைவர் கந்தசாமி, செயலாளர் அரிமா நாகராஜன், பொருளாளர் சசிகுமார் ஆகியோர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். விழாவில், தலைமையாசிரியர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் நினைவுப் பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.
மேலும்
-
வாலிபர் மீது வழக்கு
-
மின் வாரிய ஊழியர் எனக்கூறி வீடு புகுந்து சிறுமியிடம் அத்துமீறல்
-
உ.பி., கல்லுாரிகள், பல்கலைகளில் மாணவர்களுக்கு சீருடை கட்டாயம்: கவர்னர் ஆனந்திபென் படேல் உத்தரவு
-
சிறுவன் மாயம் : போலீஸ் விசாரணை
-
வைகை ஆற்றில் அகற்றப்படாத குப்பை: கால்நடைகளுக்கு ஆபத்து பொதுப்பணித்துறை கவனம் செலுத்துமா
-
வைகாசி விசாக கொடியேற்றம்