விவசாயி தற்கொலை

பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த ஏ.மேல்பாம்பட்டு வடக்கு தெருவை சேர்ந்தவர் ரமேஷ்,36; முந்திரி விவசாயி; இவரது மனைவி கீதா,21; இரு குழுந்தைகள் உள்ளனர்.

வடலுாரில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். நேற்று காலை 6:00 மணியளவில் ஏ.மேல்மாம்பட்டில் உள்ள முந்திரி தோப்புக்கு முந்திரி கொட்டைகள் எடுக்க ரமேஷ் புறப்பட்டு சென்றவர், அங்கு துாக்கில் பிணமாக தொங்கி னார்.

இதுகுறித்து அவர்கள் காடாம்புலியூர் போலிசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

மேலும், தனது கணவர் சாவில் மர்மம் உள்ளதாக கீதா அளித்த புகாரில், காடாம்புலியூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement