பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில் வசந்த உற்சவம் இன்று துவக்கம்

புதுச்சேரி: புதுச்சேரி - திண்டிவனம் சாலையில் அமைந்துள்ள பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில், இன்று (22ம் தேதி) முதல் நாளை மறுநாள் 24ம் தேதி வரை வசந்த உற்சவம் நடக்கிறது. விழாவை முன்னிட்டு இன்று (22ம் தேதி) காலை முதல் நாளை மறுநாள் 24ம் தேதி இரவு வரை பூர்வாங்க பூஜைகள் நடக்கிறது.

இந்த மூன்று நாட்களிலும் சீதாதேவி சமேத ராமச்சந்திர மூர்த்திக்கு மாலையில் வசந்த மண்டபத்தில் சிறப்பு திருமஞ்சனம் நடக்கிறது.

இன்று மலர்களாலும், நாளை காய்கறிகளாலும், நாளை மறுநாள் (24ம் தேதி) பழங்கள் அலங்காரத்திலும் சுவாமியின் சேவை உற்சவம் நடக்கிறது. தொடர்ந்து, 24ம் தேதி காலை 10:00 மணிக்கு சீதா ராம திருகல்யாணம் நடக்கி றது.

இந்த வசந்த உற்சவத்தின் மூன்று நாட்களிலும் மாலை 6:00 மணியிலிருந்து இரவு 8:00 மணி வரை இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது.

Advertisement