வராஹி அம்மனுக்கு  பஞ்சமி சிறப்பு வழிபாடு 

திட்டக்குடி, மே 22–

திட்டக்குடி அடுத்த திருவட்டத்துறை தீர்த்தபுரீஸ்வரர் கோவில் வராஹி அம்மனுக்கு நேற்று முன்தினம் பஞ்சமி திதி சிறப்பு வழிபாடு நடந்தது.

இதையொட்டி, காலை 8:00 மணியளவில் மூலவர், அம்பாளுக்கு அபிேஷகம், தீபாராதனை நடந்தது. மாலை 6:00 மணியளவில் பிரகாரத்தில் உள்ள வராஹி அம்மன் உட்பட சப்த கன்னிகளுக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள், திரவியபொடி ஆகியவைகளால் சிறப்பு அபிேஷகம், 6:30 மணியளவில் மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, வாழை இலையில் அரிசி, பூசணி உள்ளிட்ட பொருட்கள் வைத்து, விளக்கேற்றி பெண்கள் வழிபட்டனர். ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.

 

Advertisement