சிகிச்சையில் இருந்த வாலிபர் பலி கொலை வழக்காக மாற்றம்: 5 பேர் கைது
ஐஸ்ஹவுஸ்: கத்தியால் குத்தப்பட்ட வாலிபர் உயரிழந்ததை அடுத்து, கைது செய்யப்பட்ட ஐந்து பேர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.
திருவல்லிக்கேணி, ராம்நகர், 4வது தெருவைச் சேர்ந்தவர் அஜய், 19. இரு தினங்களுக்கு முன் வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார், 23 என்பவர், கூட்டாளிகள் நான்கு பேருடன் அவரை கத்தியால் சரமாரியாக குத்தி தப்பினர்.
படுகாயமடைந்த அஜய் சுயநினைவு இன்றி ஆபத்தான நிலையில் ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த ஐஸ்ஹவுஸ் போலீசார், கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட ராஜ்குமார், தனுஷ், 20, கார்த்தி, 19, முகேஷ், 19 மற்றும் காமேஷ்வரன், 28 ஆகிய ஐந்து பேரை கைது செய்தனர்.
இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி அஜய் உயிரிழந்தார். இதையடுத்து ஐஸ்ஹவுஸ் போலீசார் ஐந்து பேர் மீதான கொலை முயற்சி வழக்கை, கொலை வழக்காக மாற்றி பதிவு செய்தனர்.
மேலும்
-
கேரளத்தில் 2 ஏ.ஐ., மையங்கள் மத்திய அரசு ரூ.40 கோடி ஒதுக்கீடு
-
ஊழியர்களின் மியூச்சுவல் பண்டு தவணையை அலுவலகமே சம்பளத்தில் பிடித்து செலுத்தலாம் ஜூன் 10 வரை கருத்து கேட்கிறது செபி
-
பதிவு செய்யாத நிறுவனங்களில் பணிபுரிவோர் 15 கோடி பேர்
-
நிறுவன செய்திகள்
-
'கடனை கட்டாததற்கு போனை முடக்கம் செய்யக்கூடாது' ஆர்.பி.ஐ., புதிய விதிமுறை
-
5 ஐ.பி.ஓ.,க்கள் சந்தையின் போக்கை மாற்றுமா?