இரவு நேரத்தில் சிறுத்தை உறுமல் சத்தம்....தோட்ட உரிமையாளர்கள் திக்.. திக்..
பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் அருகே பெரியமத்தம்பாளையம் கட்டாஞ்சி மலை அடிவாரத்தில் இரவு நேரங்களில் சிறுத்தை உறுமல் சத்தம் கேட்பதால், அப்பகுதி தோட்ட உரிமையாளர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
கடந்த மாதம், பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கோட்டை பிரிவு, கக்கராயன் மலை மீது சிறுத்தை நடமாட்டம் இருந்தது. அதை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிக்க முயற்சித்தனர். ஆனால், வனத்துறையினர் கூண்டு வைத்திருப்பதை அறிந்த சிறுத்தை, அப்பகுதியில் இருந்து வெளியேறியது. தற்போது சிறுத்தை ஒன்று பெரியமத்தம்பாளையம் கட்டாஞ்சி மலை அடிவாரத்தில் நடமாடி வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, இங்கு வசிக்கும் ஷாஜகான் தோட்டத்தில் இருந்த ஆடு ஒன்றை, சிறுத்தை இழுத்துச் சென்றது. இது தொடர்பான காலடி பதிவுகளை காரமடை வனத்துறையினர் ஆய்வு செய்து, அவை சிறுத்தையின் கால் தடம் என, உறுதிப்படுத்தினர்.
இதுகுறித்து தோட்ட உரிமையாளர் ஷாஜகான் கூறுகையில், இப்பகுதியில் அடுத்தடுத்து உள்ள பல்வேறு தோட்டங்களில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட ஆடுகள், நாய்கள் ஆகியவற்றை சிறுத்தை கொன்று தின்றுள்ளது. இரவு நேரங்களில் சிறுத்தையின் நடமாட்டம் இருப்பதால், தோட்டத்தில் வசிப்பவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்து நடமாட வேண்டாம் என, வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். இரவு நேரங்களில் சிறுத்தையின் உறுமல் சத்தம் தொடர்ந்து கேட்டுக் கொண்டே உள்ளது. அதுபோன்ற நேரங்களில் பட்டாசுகளை வெடித்து, சிறுத்தையை விரட்ட வனத்துறையினர் ஆலோசனை கூறியுள்ளனர். தோட்டங்களில் குழந்தைகளின் நடமாட்டம் உள்ளதால், சிறுத்தையை பிடித்து, காட்டில் விட வனத்துறையினர் முயற்சிக்க வேண்டும் என்றார்.
மேலும்
-
ஒரு விசில் சத்தத்துக்கே ஆடிப்போன திராவிட மாடல்: பா.ஜ., கிண்டல்
-
பெரிய நிறுவனங்களுக்கு எளிதாக கடன்; சாமானியருக்கு வழங்குவதில் அலட்சியமா?
-
வி.சி.க., முஸ்லிம் லீக் கட்சிகளை விமர்சித்து தி.மு.க., - எம்.பி., ராஜா ஆபாச கருத்து: பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம்
-
25 மணி நேரம் மின் தடைஅம்மாபேட்டையில் அவதி
-
சூறைக்காற்றால் எஸ்.பி., ஆபீசில் சாய்ந்த மரம்
-
வாலிபர் மூளைச்சாவு: உறுப்புகள் தானம்