25 மணி நேரம் மின் தடைஅம்மாபேட்டையில் அவதி
பவானி:அம்மாபேட்டை, ஊமாரெட்டியூர், ஆனந்தம்பாளையம், கோனேரிப்பட்டி பிரிவு, சிங்கம்பேட்டை, நெரிஞ்சிப்பேட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், நேற்று முன்தினம் காலை முதல் மாலை வரை மாதாந்திர மின் தடை செய்யப்பட்டது. மாலை, 6:30 மணிக்கு மின்சாரம் வந்தது.
இந்நிலையில் பலத்த மழையால், அன்றிரவு, 10:00 மணிக்கு மின்தடை ஏற்பட்டது. மழை நள்ளிரவு, 1:00 மணியளவில் நின்றது. ஆனாலும் நேற்று மாலை, 5:00 மணி வரை பல இடங்களில் மின்சார வினியோகம் இல்லை. அதாவது, 25 மணி நேரம் மின் வினியோகம் தடைபட்டதால், சிறு-குறுந்தொழில்கள் வெகுவாக பாதிக்கப்பட்டதுடன், மக்களும் அவதிக்கு ஆளாகினர்.
இதுகுறித்து பவானி மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது:
இரவில் இடியுடன் கனமழை பெய்தததால், பல இடங்களில் தென்னம்மட்டைகள் முறிந்து, மின் கம்பிகள் மீது விழுந்து விட்டன. இதனால் டிரான்ஸ்பார்மரில் பழைய பீங்கான்கள் அவ்வப்போது உடைந்ததால் இடையூறு ஏற்பட்டது. சரி செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு கூறினர்.
ஆப்பக்கூடலில்...இதேபோல் ஆப்பக்கூடல், கரட்டுப்பாளையம், ஓசைபட்டி, முனியப்பன்பாளையம், கூலிவலசு, வெள்ளாள
பாளையம், கூத்தம்பூண்டி பகுதிகளில், நேற்று முன்தினம் இரவு, 10:00 மணியளவில் தடைபட்ட மின்சாரம், நேற்று காலை, 8:00 மணிக்கே வந்தது. 11 மணி நேரம் மின்தடையால் மக்கள்
அவதிப்பட்டனர்.
மேலும்
-
விளம்பர செய்தி... செயின்ட் ஆண்டனிஸ் பள்ளி சாதனை
-
ஞாயிறு: சோழர் பட்டறையில் துாரிகைகளின் திருவிழா கேன்வாசில் கவிதைபாடும் ஓவியங்கள்
-
அலுவலக விருப்பம்: பி.எஸ்., மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் 26ம் தேதி குரு பெயர்ச்சி சிறப்பு பூஜை
-
துாய்மை இயக்கப் பணி கூடுதல் கலெக்டர் ஆய்வு
-
தி.மு.க., ஆய்வு குழு வருகை மாவட்ட செயலாளர் தகவல்
-
தகவல் சுரங்கம்