10ம் வகுப்பில் வெற்றி பெற்ற பழங்குடி மாணவர்களுக்கு வாழ்த்து
பந்தலுார்: பந்தலுார் அருகே தேவாலா அரசு பழங்குடியினர் மேல்நிலைப் பள்ளியில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற பழங்குடியின மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
தேவாலா அரசு பழங்குடியினர் மேல்நிலைப் பள்ளியில், 10 வகுப்பு பொதுத் தேர்வை, 67 மாணவர்கள் எழுதினர். 67 பேரும் தேர்ச்சி பெற்ற நிலையில், மாணவி ஓவியா, 478 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றார். மனைவி அபிநயா ஸ்ரீ அறிவியல் பாடத்தில், 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
அத்துடன் பனியர் சமுதாய பழங்குடியின மாணவர்களான சரண்யா, சுமித்ரா, வினோதினி, முருகன் ஆகிய மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். நேற்று பெற்றோருடன் பள்ளிக்கு வந்த பழங்குடியின மாணவர்களுக்கு, இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் சமுத்திர பாண்டியன் எதிர்கால கல்வி குறித்து ஆலோசனை வழங்கினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஹோண்டுராஸில் இரு இடங்களில் துப்பாக்கிச்சூடு; 6 போலீசார் உள்பட 25 பேர் சுட்டுக்கொலை
-
அமைச்சரவையில் வன்னி அரசு, ஷாஜகான்; இன்று 9.30 மணிக்கு பதவியேற்பு
-
இந்தியாவின் சந்திரயான்-3 திட்டம்; அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் விருது வழங்கி கவுரவிப்பு
-
நாமக்கல் மாவட்டத்திற்கு நான்கு அமைச்சர்
-
கோவைக்கு 2 அமைச்சர்களை தந்து முதல்வர் விஜய் அதிர்ச்சி வைத்தியம்; வேலுமணியின் அமைச்சராகும் கனவு தவிடுபொடி
-
64 ஆண்டுகளுக்கு பின்னர் குமரிக்கு காங்., அமைச்சர்; கழகங்களிடம் கைகட்டிய நிலை மாறியதாக மகிழ்ச்சி
Advertisement
Advertisement