இந்தியாவின் சந்திரயான்-3 திட்டம்; அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் விருது வழங்கி கவுரவிப்பு
நமது நிருபர்
2026ம் ஆண்டிற்கான கோடார்ட் விண்வெளி ஆய்வு விருதை இந்தியாவின் சந்திரயான்-3 திட்டத்திற்கு அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் வழங்கியது. அமெரிக்காவிற்கான இந்தியத் தூதர் வினய் குவாத்ரா இந்த விருதை பெற்றுக்கொண்டார்.
சந்திரயான்-3 என்பது இந்திய விண்வெளி ஆய்வு மையத்தால் நிலவின் தென் துருவப் பகுதியை ஆய்வு செய்வதற்காக உருவாக்கப்பட்ட விண்கலத் திட்டமாகும். நிலவின் மேற்பரப்பில் விண்கலத்தை மெதுவாகவும் பாதுகாப்பாகவும் தரையிறக்கும் திறனை நிரூபித்ததன் மூலம், உலக அளவில் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு என்ற வரலாற்றுச் சாதனையை இந்தியா படைத்தது.
இந்தியாவின் சந்திரயான்-3 திட்டத்திற்கு, அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் 2026ம் ஆண்டிற்கான கோடார்ட் விண்வெளி ஆய்வு விருதை வழங்கி கவுரவித்தது. அமெரிக்காவிற்கான இந்தியத் தூதர் வினய் குவாத்ரா இந்த விருதை பெற்றுக்கொண்டார்.
பிறகு இந்தியத் தூதர் வினய் குவாத்ரா பேசிய போது, பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வையையும், விண்வெளி ஆய்வு, விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் ஆகியவற்றிற்கான இந்தியா மேற்கொண்டு வரும் நடவடிக்கையை எடுத்துரைத்தார்.
அவர், விண்வெளி ஆய்வில் இந்தியா மற்றும் அமெரிக்கா தொழில்துறைகள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு இடையிலான உறவை வலுப்படுத்தவும் அழைப்பு விடுத்தார். கோடார்ட் விண்வெளி ஆய்வு விருது என்பது விண்வெளித் துறையில் மிகச் சிறப்பான சாதனைகளுக்காக அமெரிக்க விண்வெளி நிறுவனம் வழங்கும் மிக உயரிய விருதாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரோவின் சாதனைகள் தொடரட்டும். வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்
விஞ்ஞானிகளுக்கும் , ஊக்குவித்த அரசுக்கும் பாராட்டுக்கள் .....
விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்மேலும்
-
ஒரு விசில் சத்தத்துக்கே ஆடிப்போன திராவிட மாடல்: பா.ஜ., கிண்டல்
-
பெரிய நிறுவனங்களுக்கு எளிதாக கடன்; சாமானியருக்கு வழங்குவதில் அலட்சியமா?
-
வி.சி.க., முஸ்லிம் லீக் கட்சிகளை விமர்சித்து தி.மு.க., - எம்.பி., ராஜா ஆபாச கருத்து: பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம்
-
25 மணி நேரம் மின் தடைஅம்மாபேட்டையில் அவதி
-
சூறைக்காற்றால் எஸ்.பி., ஆபீசில் சாய்ந்த மரம்
-
வாலிபர் மூளைச்சாவு: உறுப்புகள் தானம்