64 ஆண்டுகளுக்கு பின்னர் குமரிக்கு காங்., அமைச்சர்; கழகங்களிடம் கைகட்டிய நிலை மாறியதாக மகிழ்ச்சி
நமது நிருபர்
கடந்த, 64 ஆண்டுகளுக்கு பின், குமரி மாவட்ட காங்கிரசுக்கு அமைச்சர் பதவி கிடைத்துள்ளது. லுார்தம்மாள் சைமனுக்கு பின், ராஜேஷ்குமார் காங்கிரஸ் சார்பில் அமைச்சரானதை, குமரி மாவட்ட காங்கிரசார் கொண்டாடி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆறு தொகுதிகளிலும், தமிழக வெற்றிக் கழகம் போட்டியிட்டது. கன்னியாகுமரி குளச்சல், கிள்ளியூர் தொகுதிகளில் 1,000 முதல் 3,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் த.வெ.க., தோல்வியை தழுவியது. ஆனால், ஆறு தொகுதிகளிலும் இரண்டாம் இடத்தை த.வெ.க., பெற்று திராவிட கட்சிகளுக்கு அதிர்ச்சி கொடுத்தது.
இந்நிலையில், தேர்தலுக்கு பின், த.வெ.க., உடன் காங்., கூட்டணி அமைத்ததால், அக்கட்சிக்கு இரண்டு அமைச்சர்கள் பதவி ஒதுக்கப்பட்டதில், கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் தொகுதியைச் சேர்ந்த ராஜேஷ்குமார், சுற்றுலாத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.
கடந்த, 1957 முதல் 62 வரையிலான காமராஜரின் இரண்டாவது அமைச்சரவையில் குளச்சல் தொகுதியில் இருந்து வெற்றி பெற்ற லுார்தம்மாள் சைமன், உள்ளாட்சி மற்றும் மீன்வளத்துறை அமைச்சராக பதவி வகித்தார். தற்போது, 64 ஆண்டுகளுக்கு பின், காங்கிரஸ் சார்பில் ஒருவர் அமைச்சர் பதவி ஏற்றுள்ளதை, குமரி மாவட்ட காங்கிரசார் கொண்டாடி வருகின்றனர்.
ராஜேஷ்குமாரின் கிள்ளியூர் தொகுதி காங்கிரசின் கோட்டையாக கருதப்படுகிறது. இங்கு எந்த திராவிட கட்சியும் இதுவரை வெற்றி பெற்றதில்லை. கடந்த இரண்டு தேர்தலிலும் மிக அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ராஜேஷ் குமார், இம்முறை மிக சிரமப்பட்டு தான் வெற்றியை எட்டிப் பிடித்தார். அதாவது, த.வெ.க., வேட்பாளர் சபினை விட, 1,311 ஓட்டுகள் மட்டுமே கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்த அமைச்சர் பிரதிநிதித்துவம் கட்சியை மேலும் பலப்படுத்தும் என நிர்வாகிகள் கூறுகின்றனர். இதுவரை தி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,வுடன் கைகட்டி நின்ற நிலை மாறிவிட்டதாகவும், இது ஒரு நல்ல மாற்றம் என்றும் காங்கிரசார் கூறுகின்றனர்.
கன்னியாகுமரி, குளச்சல், கிள்ளியூரில் சொற்ப ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்த த.வெ.க., வேட்பாளர்களும் அங்குள்ள நிர்வாகிகளும் சற்று ஏமாற்றத்துடன் காணப்படுகின்றனர். எனினும், முதல் தேர்தலிலேயே ஒரு நல்ல தொடக்கத்தை கொடுக்க முடிந்ததாக இவர்கள் கூறுகின்றனர்.
போட்டியிட்ட ஆறு தொகுதிகளிலும் த.வெ.க., தோல்வி அடைந்தாலும் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு அமைச்சர் பிரதிநிதித்துவம் கிடைத்ததில், மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த காங்கிக மந்திரி பதவி வாங்கி அப்படியெ அறுத்து தள்ளிடுவாங்க! கெரகத்த 60 வருசமா யாராவது முதுகிலே சவாரி செஞ்சவங்க என்ன கிழிப்பாங்க? 20 மந்திரி கிடைச்சாலும் சட்டைய கிழிச்சிட்டு அலைவாங்க.
அடேய் இனிமேல் TVK விடம் கை கட்டி நிக்கப்போறீங்க.
த.வெ.க.போட்ட கைப்பிடி பிச்சை. இதில் கொண்டாட என்ன இருக்கு?
இப்ப என்ன ஆச்சு, கந்து வட்டிக்காரங்ககிட்ட கையேந்தி நிக்க வேண்டியதுதான், அதனாலதான் உங்களுக்கு சின்னம் கை.
He should be mediating with Karnataka on water issues
இவர் தமிழ்நாட்டில் ஒரு மந்திரி. கன்னியாகுமாரி ஜில்லா வுக்கு ஒரு மந்திரி. கன்னியாகுமாரி மாவட்ட diocese மற்றும் பிஷப் ஹவுஸ் க்கு அடிமை சேவகம் செய்யமாட்டார் என நம்புகிறோம்.
இவர்கள் யாரை எப்போது எப்படிப் பேசுவார்கள் என்றுத் தெரியாது.எங்கு சேர்வார்கள் என்றுத் தெரியாது.எங்கும் தேயப் போலிமதசார்பின்மைக் காரணம்.இன்று இங்கு முஸ்லீம் லீக் பதவி ஏற்பு. கேரளாவில் முஸ்லீம் லீக் ஆதரவில் ஆட்சி.பேசுவது மதசார்பற்ற என்ற வார்த்தை.எங்கும் சாயம் வெளுக்கிறது.
கை கட்டிய நிலை மாறியது என்று மானமில்லால் சொல்ல வேண்டாம்...... நோகாமல் நுங்கு தின்னும் நிலை என்று சொல்லவும்
64 வருடம் காங்கிரஸ் வாழற ஒருவரும் முன் வரவில்லை. தேர்தலுக்கு தேர்தல் தலையெ எட்டி காட்டுவது நடக்காது. நோ கடின உழைப்பு.நோ munneththam.
"கன்னியாகுமரி மாவட்டம் சுற்றுலாத்துறையில் Tourism சர்வதேச அளவில் வளரக்கூடிய பல வாய்ப்புகளைக் கொண்டது. 64 வருடங்களுக்குப் பிறகு இந்த மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஷ்குமார் அவர்களுக்குச் சுற்றுலாத்துறை அமைச்சர் பதவி கிடைத்திருப்பது ஒரு நல்வாய்ப்பு. வெறும் அரசியல் கொண்டாட்டத்தோடு நின்றுவிடாமல், குமரி மாவட்டத்தின் உள்கட்டமைப்பு மற்றும் சுற்றுலாத் திட்டங்களை இவர் முழுமையாக மேம்படுத்த வேண்டும்"மேலும்
-
கடலாடியில் இரவு நேர டாக்டர்கள் இல்லாததால் நோயாளிகள் அவதி திறப்பு விழாவிற்கு காத்திருக்கும் புதிய கட்டடம்
-
ஐ.டி.ஐ.,வளாகத்தேர்வு
-
விலை கிடைப்பதால் திராட்சை வாழை சாகுபடி பரப்பு அதிகரிப்பு
-
சூரிய, காற்றாலை மின் உற்பத்தி திறன் அதிகரிப்பு; மோடி தலைமைக்கு கமல் பாராட்டு
-
பெண்களை இழிவுபடுத்தி திமுக எம்பி ஆ.ராஜா சர்ச்சை பதிவு; குவியும் கண்டனங்கள்
-
60 நாட்களில் மிகப்பெரிய நிர்வாக மாற்றம்; சொல்கிறார் அமைச்சர் ஆதவ்