நாமக்கல் மாவட்டத்திற்கு நான்கு அமைச்சர்

3

நமது நிருபர்



நாமக்கல் மாவட்டத்தில், திருச்செங்கோட்டை சேர்ந்த அருண்ராஜ், முதல் கட்டமாக பதவியேற்ற அமைச்சர்கள் பட்டியலில் இடம் பெற்று இருந்தார்.

அமைச்சரவை விரிவாக்கத்தின் போது, ராசிபுரம் லோகேஷ் தமிழ்ச்செல்வன், குமாரபாளையம் விஜயலட்சுமி, தமிழக வெற்றிக் கழகத்தின் நாமக்கல் கிழக்கு மாவட்டசெயலர் செந்தில்நாதனின் மகளான அவிநாசி எம்.எல்.ஏ., கமலி ஆகியோருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இருப்பினும், கமலி திருப்பூர் மாவட்ட கணக்கில் வருகிறார். ஆனாலும், ஒரே மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்பது இதுவே முதல்முறை.

Advertisement