ஹோண்டுராஸில் இரு இடங்களில் துப்பாக்கிச்சூடு; 6 போலீசார் உள்பட 25 பேர் சுட்டுக்கொலை

டெகுசிகல்பா: ஹோண்டுராஸ் கடற்கரைப் பகுதிகளில் நடந்த இரு வேறு துப்பாக்கிசூடு சம்பவத்தில் 6 போலீஸார் உட்பட 25 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

மத்திய அமெரிக்க நாடானா ஹோண்டுராஸில் உள்ள ட்ருஜிலோ நகரின் தோட்டம் ஒன்றில் துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலில் 19 தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதேபோல, குவாத்தமலா எல்லைக்கு அருகில் உள்ள கோர்டெஸ் மாகாணத்தின் ஓமோவா நகரில், போலீசாரைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் ஒரு மூத்த அதிகாரி உட்பட 6 போலீஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.

இதையடுத்து, போலீசாரும், ஆயுதப் படைகளும் அந்தப் பகுதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். தடய அறிவியல் நிபுணர்கள் மற்றும் அரசு வழக்கறிஞர்கள் அடங்கிய சிறப்புக் குழுக்கள் விசாரணைக்காக அமைக்கப்பட்டுள்ளன.

வன்முறைகள் மற்றும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் ஹோண்டுராஸ் நாட்டில் அதிகளவில் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement