பெங்களூருவில் தரையிறங்கும் போது ஏர் இந்தியா விமானம் விபத்து

1

பெங்களூரு: பெங்களூருவில் தரையிறங்கும் போது ஏர் இந்தியா விமானத்தின் வால் பகுதி தரையில் மோதி விபத்துக்குள்ளானது.

டில்லியிலிருந்து பெங்களூரு வந்த ஏர் இந்தியா விமானம், இன்று தரையிறங்கும்போது, அதன் வால் பகுதி ஓடுதளத்தில் மோதி விபத்துக்குள்ளானது. விமானத்தில் இருந்த பயணிகள் மற்றும் பணியாளர்கள் உட்பட மொத்தம் 179 பேரும் பாதுகாப்பாக இருப்பதாக ஏர் இந்தியா நிறுவனம் உறுதிபடுத்தியுள்ளது. மேலும், அந்த விமானம் விரிவான ஆய்விற்காகத் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஏர் இந்தியா செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "விமானம் தரையிறங்கும் போது வால் பகுதி தரையில் மோதி விபத்துக்குள்ளானது. ஆனாலும், விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கியது. பயணிகள் அனைவரும் வழக்கம் போல் விமானத்தில் இருந்து வெளியேறினர். விரிவான ஆய்விற்காக அந்த விமானம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும். இதன் காரணமாக, பெங்களூரிலிருந்து மறுமார்க்கமாக டில்லி செல்லவிருந்த பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன" என்று தெரிவித்தார்.

Advertisement