32 அரசு பள்ளிகள் நுாற்றுக்கு நுாறு தேர்ச்சி

திருப்பூர்:பத்தாம் வகுப்பு தேர்ச்சியில் கூடுதல் கவனம் செலுத்தியதால், 32 பள்ளிகள் இம்முறை நுாற்றுக்கு நுாறு சதவீத தேர்ச்சியை பெற்று அசத்தியுள்ளன.

திருப்பூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள, 148 அரசு பள்ளிகளில், 38 அரசு பள்ளிகள் கடந்த முறை நுாற்றுக்கு நுாறு சதவீத தேர்ச்சியை பெற்றன. இம்முறை, 60 அரசு பள்ளிகள் நுாற்றுக்கு நுாறு ரிசல்ட் கொடுத்து, தேர்ச்சி சதவீதம் 96.28 சதவீதம் அடைய காரணமாகியுள்ளது.

கடந்த முறை நுாற்றுக்கு நுாறு தேர்ச்சி பெற்ற, நல்லிமடம், லக்கமநாயக்கன்பட்டி, வடுகப்பட்டி, பொன்னு அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி, தாராபுரம், வலையபாளையம், அண்ணாநகர், பாப்பான்குளம், செங்கப்பள்ளி அரசு உயர்நிலைப்பள்ளி ஆகிய எட்டு பள்ளிகள் இம்முறை நுாற்றுக்கு நுாறு தேர்ச்சி தவற விட்டுள்ளன.



இந்தாண்டு...

மூலனுார், கன்னிவாடி, பெல்லாம்பட்டி, சின்னக்காம்பட்டி, சின்னக்காம் பாளையம், புதுப்பை, மங்கலப்பட்டி, தாசர்பட்டி, குண்டடம், கருகம்பாளையம், கோடங்கிபாளையம், காட்டூர், காரணம்பேட்டை, பொல்லிக்காளிபாளையம், காளிநாதம்பாளையம், பெரிய இல்லியம், வெள்ளிரவெளி, மொராட்டுப்பாளையம், கருக்கன்காட்டுப்புதுார், வஞ்சிபாளையம், சர்க்கார்பெரியபாளையம், கருமஞ்சிறை, மங்கலம், பூலாங்கிணறு, ராமச்சந்திராபுரம், உடுக்கம்பாளையம், கல்லாபுரம், துங்காவி, ஏ.அம்மாபட்டி, 63 வேலம்பாளையம் அரசு பள்ளிகள் இந்தாண்டு நுாற்றுக்கு நுாறு தேர்ச்சியை பெற்று பாராட்டு பெறுகின்றன.



மாதிரி பள்ளி அசத்தல்

சிறப்பாக திறமை காட்டும் மாணவர், மாணவியரை கொண்டு அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளிகள் மாவட்டத்தில் செயல்படுகிறது. மூலனுார் பள்ளியில், 69 பேரும், உடுமலை பள்ளியில், 77 பேரும் தேர்வெழுதி, அனைவரும் தேர்ச்சி பெற்று விட்டனர். அம்மாபட்டியில் செயல்படும் ஆதிதிராவிடர் நலப்பள்ளியில், பத்து பேர் தேர்வெழுதி, பத்து பேரும் தேர்ச்சி பெற்று சாதித்துள்ளார்.

Advertisement