இளநிலை நுாலக உதவியாளர் பதவிக்கான தேர்வு அறிவிப்பு

புதுச்சேரி: இளநிலை நுாலக உதவியாளர் மற்றும் காட்சி கூடம் உதவியாளர் பதவிகளுக்கான ஒருங்கிணைந்த உயர்நிலை தேர்வு வரும் 31ம் தேதி நடக்கிறது.

இதுகுறித்து அரசு சார்பு செயலர் முருகேசன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

புதுச்சேரி அரசு துறைகளில் காலியாக உள்ள இளநிலை நுாலக உதவியாளர் மற்றும் காட்சி கூடம் உதவியாளர் பதவிகளுக்கான ஒருங்கிணைந்த உயர்நிலைத் தேர்வு வரும் 31ம் தேதி நடக்கிறது. அதன்படி, புதுச்சேரியில் உள்ள அனைத்து பிராந்தியங்களிலும் 59 தேர்வு மையங்களில் இத்தேர்வு நடக்கிறது.

இத்தேர்வுக்கான அனுமதி சீட்டை தேர்வர்கள் https://recruitment.py.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (22ம் தேதி) பகல் 12 மணி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இது தொடர்பாக ஏதேனும் உதவி தேவைப்பட்டால், தேர்வர்கள் அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 0413-2233338 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Advertisement