விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரியில் கட்டுமானப் பணிகள்: கலெக்டர் ஆய்வு

விழுப்புரம்: விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில் நடந்து வரும் புதிய கட்டமைப்பு பணிகளை கலெக்டர் ஷேக்அப்துல்ரஹ்மான் மற்றும் அலுவலர்கள் நேற்று ஆய்வு செய்தனர்.

அப்போது அங்கு புதிதாக 34 கோடி ரூபாய் மதிப்பில் 4 தளங்களுடன் 100 படுக்கை வசதிகள் கொண்ட தீவிர அவசர சிகிச்சைப் பிரிவு கட்டடம் கட்டப்பட்டு வருவதையும், அருகே 10 கோடி ரூபாய் மதிப்பில் கூடுதல் மகப்பேறு கட்டடம் கட்டப்பட்டு வருவதையும் பார்வையிட்டார்.

புதிய கட்டுமானப் பணிகளை தரமாகவும் விரைந்தும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என, பொதுப்பணித்துறை பொறியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

ஆய்வின்போது, அரசு மருத்துவக் கல்லுாரி முதல்வர் லுாசிநிர்மல் மெடோனா, பொதுப்பணித்துறை செயற் பொறியாளர் ராஜூ, மருத்துவக்கல்லுாரி நிலைய அலுவலர் ரவிக்குமார் உட்பட பலர் உடனிருந்தனர்.

Advertisement