தவெக அமைச்சரவையில் விசிக; திருமா அறிவிப்பு
சென்னை:தவெக தலைமையிலான தமிழக அமைச்சரவையில் விசிக இடம்பெறும் என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.
சட்ட சபை தேர்தலில் தவெக வெற்றி பெற்ற நிலையில், கடந்த 10ம் தேதி விஜய் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருடன் சில அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.
இந்த நிலையில், விஜய் தலைமையிலான அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது. 23 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர்.
இதனிடையே, அமைச்சரவையில் முஸ்லீம் இடம்பெறும் என்று அக்கட்சி அறிவித்துவிட்டது. அதேவேளையில், விசிக இடம்பெறுமா? என்பது குறித்து இன்று மாலை அறிவிப்பதாக திருமாவளவன் கூறியிருந்தார்.
இந்த நிலையில், தமிழக அமைச்சரவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம்பெறும் என்று திருமாவளவன் அறிவித்துள்ளார். மேலும், அமைச்சராக வன்னி அரசு பதவியேற்பார் என்று கூறினார்.
நாளை முஸ்லிம் லீக் கட்சியின் ஷாஜகானும், விசிகவின் வன்னியரசும் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர்.
ஆக உட்கார ஒரு சீட் கிடைச்சாச்சு...
கொள்கையில்லா கூட்டம் கொரில்லாவாக இருந்தால் என்ன பில்லாவாக இருந்தால் என்ன ? மாற்றம் என்று சிம்பிலா எடுத்துகொண்டது எவ்வளவு வினைகளை தமிழ்நாட்டிற்கு தரப்போகிறதோ? கொள்கை தலைவர்களை அவர்களின் அர்பணிப்பை மிகவும் கேவலபடுத்திவிட்டது தவெக . இதற்கு இவர்கள் நாகரிகமற்ற பேச்சும். அவர்களது செயல்முறையும் சற்றும் கொள்கை தலைவர்களின் கோட்பாடுகளில் ஒன்றவில்லை. திருமா அவர்களின் மீது இருந்த மதிப்பு இன்றோடு கெட்டது.
மொத்தத்தில் நமது மாண்புமிக்க தலைவர்கள் அனைவருக்கும் மந்திரி பதவி தேவை. "துக்ளக்" ஆசிரியர்
"சோ" ஒருபடத்தில் கூறுவார் "நான் பிரதமர்" மற்ற உறுப்பினர்கள் எல்லோரும் "உதவி பிரதமர்" என்பர். ஏனோ
அது இப்போது எனக்கு thondrukiradhu.
இந்த இரண்டு தேச எதிரிகளும் நிச்சயம் வந்தே மாதரம் பாடலை வைத்து அரசியல் செய்யும்
துரோகி
தா வே க விற்கு வாக்களித்த இந்துக்களுக்கு இது மிகவும் நல்ல செய்தி அல்ல. மூன்று கட்சிகளும் (Congress, VCK மற்றும் muslim league) ஹிந்து விரோத கட்சிகள். தமிழகத்தில் உள்ள இந்துக்களுக்கு சாபம் தீர்ந்த பாடில்லை.
பதவி ஆசை யாரைவிட்டது. திராவிட பி அணிகள் உள்ளே நுழைகிறது, விஜய் ஜாக்கிரதையாக அடுத்த அணியை உருவாக்கவேண்டும்.
அடிச்சான் பாரு!அப்பாய்ண்மென்ட் ஆர்டர்!மேலும்
-
பெட்ரோல், டீசல் விற்பனைக்கு கட்டுப்பாடு விதிப்பதா? எண்ணெய் நிறுவனங்களுக்கு எதிராக கோர்ட்டில் வழக்கு
-
வருமானத்துக்கு குறைச்சல் கிடையாது வசதி தான் இல்லை நம்ம ஸ்டேஷனில்
-
அறுந்த நிலையில் இணைப்பு ஒயர்கள் காட்சி பொருளானது ‘சிசிடிவி’ கேமரா
-
தினமலர் செய்தி எதிரொலி: வீல் சேருக்கு ரூ.2,000 கெடுபிடி வசூல்; ஏர்போர்ட் ஊழியர்கள்மீது நடவடிக்கை
-
கொடுத்த பணத்தை கேட்டவரை காரில் இழுத்து சென்றவர் கைது
-
துார்வாரும் பணியை தொடங்குகள் மாநகராட்சி கமிஷனர் உத்தரவு