தமிழகத்தில் தகதகக்கும் வெயில்; 16 இடங்களில் அடித்தது சதம்

1


சென்னை: தமிழகத்தில் 16 இடங்களில் 100 டிகிரியை தாண்டி வெப்பநிலை பதிவாகி இருக்கிறது; அதிகபட்சமாக வேலூரில் 108.5 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது.

தமிழகத்தில், கடந்த சில நாட்களாக வெப்பத்தின் தாக்கம் கடுமையாக உயர்ந்து வருகிறது. அதிகபட்சமாக வேலூரில் 108.5 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. சென்னையில் 2 நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என வானிலை மையம் கணித்துள்ளது.

இந்நிலையில் இன்று 16 இடங்களில் 100 டிகிரியை தாண்டி வெப்பநிலை பதிவாகி இருக்கிறது; அதன் விவரம் பின்வருமாறு:

இன்றைய வெயில் (டிகிரி பாரன்ஹீட்)

1. வேலுார்- 108.5
2. திருத்தணி-107.7
3.சென்னை ஏர்போர்ட்-106.8
4.ஈரோடு-105
5.சென்னை நுங்கம்பாக்கம்- 104.7

6.திருச்சி ஏர்போர்ட்- 104
7.மதுரை-104
8.கரூர் பரமத்தி-104
9.மதுரை ஏர்போர்ட்- 103.2
10.தஞ்சை- 102.2

11.தர்மபுரி-102.2
12.நாமக்கல்- 101.8
13.சேலம்-100.5
14.பரங்கிப்பேட்டை- 100.76
15.திருப்பத்தூர்-100.58
16.கடலூர்- 100.22

Advertisement