ஹார்முஸ் ஜலசந்தி முடக்கம் விரைவில் முடிவுக்கு வருகிறது?
இஸ்லாமாபாத்: அமெரிக்கா - ஈரான் இடையே நிலவி வரும் போர் பதற்றத்தை தணித்து, முடங்கிக் கிடக்கும் ஹார்முஸ் ஜலசந்தி கடல் வழிப் பாதையை மீண்டும் திறப்பதற்கான முயற்சிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேற்காசிய நாடான ஈரானுடனான போரை முடிக்க, ஹார்முஸ் ஜலசந்தியில் கடல்சார் போக்குவரத்து உடனடியாக இயல்பு நிலைக்குத் திரும்ப வேண்டும் என்பதை அமெரிக்கா, தன் முதல் நிபந்தனையாக விதித்துள்ளது. இதற்கு ஈரான் சம்மதித்தால், அதன் மீதான சில பொருளாதாரத் தடைகளை தளர்த்தவும் தயாராக உள்ளது. ஆனால் ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பான விவகாரங்களில் எந்த சலுகையும் வழங்க முடியாது என்பதில் அமெரிக்கா உறுதியாக உள்ளது.
மறுபக்கம், செறிவூட்டப்பட்ட யுரேனியம் மற்றும் அணுசக்தி விவகாரங்களில் ஓரளவு நெகிழ்வுதன்மையைக் காட்ட சம்மதித்தாலும், அமெரிக்கா அளிக்கும் தற்போதைய உத்தரவாதங்கள் போதுமானதாக இல்லை என்று ஈரான் கருதுகிறது. இதனால் நம் அண்டை நாடான பாகிஸ்தான் மத்தியஸ்தத்தில் இருதரப்பும் மேற்கொண்ட பேச்சுகளில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.
இந்த போரால் சர்வதேச அளவில் நாளுக்கு நாள் எரிபொருள் தட்டுப்பாடு அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதையடுத்து உலகளாவிய எரிசக்தி போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்க சவுதி அரேபியா, கத்தார், துருக்கி மற்றும் எகிப்து ஆகிய மேற்காசிய நாடுகள், ஹார்முஸ் ஜலசந்தியின் பாதுகாப்பிற்காக ஒரு பரந்த பிராந்திய மேலாண்மை அமைப்பை உருவாக்க ஆதரவு தெரிவித்துள்ளன.
இதைத்தொடர்ந்து, அமெரிக்கா - ஈரான் இடையே மத்தியஸ்தம் செய்யும் முயற்சியை பாகிஸ்தான் மீண்டும் துவக்கியுள்ளது. ஈரான் மற்றும் பாகிஸ்தான் இடையே எட்டப்படவுள்ள கொள்கை உடன்படிக்கை, அமெரிக்கா - ஈரான் இடையே 30 நாட்களுக்குள் ஒரு முறையான, கட்டமைக்கப்பட்ட பேச்சை தொடங்க வழிவகுக்கும் எனக் கூறப்படுகிறது.
@block_B@
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உடனான மோதல் போக்குக்கு மத்தியில், கடந்த சில மாதங்களாக ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் விதித்திருந்த கடுமையான கட்டுப்பாடுகள் தற்போது திடீரென தளர்த்தப்பட்டுள்ளன. அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், எண்ணெய் டாங்கர்கள் மற்றும் கன்டெய்னர் கப்பல்கள் உட்பட மொத்தம் 26 வணிகக் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாப்பாக கடந்துள்ளன. சர்வதேச கடல்சார் தரவு நிறுவனமான 'கெப்லர்' வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, கடந்த மே 11 முதல் மே 17 வரையிலான ஒரே வாரத்தில் மட்டும், 55 சரக்கு மற்றும் கச்சா எண்ணெய் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து சென்றுள்ளன. அதற்கு முந்தைய வாரத்தில் வெறும் 19 கப்பல்கள் மட்டுமே இந்த ஆபத்தான வழியே பயணித்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. போரின் உச்சக்கட்ட முடக்கத்தில் இருந்து, தற்போது கப்பல்களின் எண்ணிக்கை திடீரென இருமடங்காக அதிகரித்துள்ளது சர்வதேச வர்த்தகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.block_B
@block_B@
மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர் பதற்றத்தை தணிக்கும் நோக்கில், பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மோசின் நக்வி, ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சியை நேரில் சந்தித்து தீவிர ஆலோசனை நடத்தினார். ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக அவர், ஈரானுக்கு அவசரப் பயணம் மேற்கொண்டார். நேற்று காலை அவர் நடத்திய இந்த உயர்மட்ட சந்திப்பில், அமெரிக்கா வழங்கிய அமைதித் திட்ட முன்மொழிவுகள் மற்றும் ஈரானின் 14 அம்சக் கோரிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இதைத்தொடர்ந்து பாக்., ராணுவத் தலைமை தளபதி ஆசிம் முனீர் விரைவில் ஈரான் தலைநகர் டெஹ்ரானுக்கு சென்று இறுதி உத்தரவாதங்களை அளிக்கவுள்ளார்.block_B
போர் ஈரானுக்கும், இஸ்ரேலுக்குமா? அல்லது ஈரானுக்கும், அமெரிக்காவுக்குமா? அல்லது ஈரானை எதிர்த்து அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து போரா? ஆனால் ஒண்ணு நல்லா புரியுது, இந்த போர் மூள்வதற்கு முக்கிய காரணம் அமெரிக்கா என்று.மேலும்
-
குற்றவழக்குகள் துறையில் 'சிபாரிசு நியமனம்' நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
-
காங்., எம்.எல்.ஏ., விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி கிடைத்தது எப்படி?
-
'அவருக்கு பதில் இவர்' : எம்.எல்.ஏ.,வால் சர்ச்சை
-
கன்னியாகுமரி நகரில் அங்கீகாரமற்ற கட்டடங்கள் : உயர்நீதிமன்றம் உத்தரவு
-
கோயில் சொத்துக்களை பாதுகாக்க நடவடிக்கை: உயர்நீதிமன்றம் உத்தரவு
-
மா.செ., கூட்டத்தை மீண்டும் கூட்டும் பழனிசாமி; பங்கேற்காவிட்டால் பதவியை பறிக்கவும் திட்டம்