வழிப்பறி முயற்சி வழக்கில் கைது
மதுரை: கூடல்புதுாரைச் சேர்ந்தவர் ஜெயலட்சுமி 55. மே 13ம் தேதி வீட்டருகே நடந்துவந்தபோது டூவீலரில் வந்த 2 பேர், ஜெயலட்சுமியின் கைப்பையை பறித்து தப்ப முயன்றபோது எதிரே வந்த டூவீலரில் மோதி விழுந்தனர். பின்னர் கைப்பையை விட்டுவிட்டு தப்பினர். இதுதொடர்பாக மீனாட்சிபுரம் சாலமன்ராஜா 25, வள்ளுவர் காலனி விஜய் என்ற சுப்பு 27, ஆகியோரை கூடல்புதுார் போலீசார் கைது செய்தனர்.
மினி பஸ் மோதி முதியவர் பலி
மதுரை: செல்லுார் திருவாப்புடையார் கோயில் அருகே (மே 21 )மாலை மினி பஸ் மோதியதில் 70 வயது முதியவர் பலியானார். அவர் யார் என போலீசார் விசாரிக்கின்றனர்.
டூவீலர்கள் திருடர்கள் கைது
மதுரை: நகரின் பல்வேறு பகுதிகளில் டூவீலர்கள் திருடுபோயின. இதுதொடர்பாக காடுபட்டி அலெக்ஸ்குமார் 27, விக்கிரமங்கலம் கபில்தேவ், நடுமுதலைக்குளம் அன்பரசன் 34, நிலக்கோட்டை பகுதி பிரசாந்த் 33, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
மேலும்
-
கேரளத்தில் 2 ஏ.ஐ., மையங்கள் மத்திய அரசு ரூ.40 கோடி ஒதுக்கீடு
-
ஊழியர்களின் மியூச்சுவல் பண்டு தவணையை அலுவலகமே சம்பளத்தில் பிடித்து செலுத்தலாம் ஜூன் 10 வரை கருத்து கேட்கிறது செபி
-
பதிவு செய்யாத நிறுவனங்களில் பணிபுரிவோர் 15 கோடி பேர்
-
நிறுவன செய்திகள்
-
'கடனை கட்டாததற்கு போனை முடக்கம் செய்யக்கூடாது' ஆர்.பி.ஐ., புதிய விதிமுறை
-
5 ஐ.பி.ஓ.,க்கள் சந்தையின் போக்கை மாற்றுமா?