தேனியில் பயன்பாட்டிற்கு வருமா தோழி விடுதி

தேனி:தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் 2025ல் பணிபுரியும் பெண்களுக்கான தோழி பெண்கள் விடுதி அமைக்கும் பணி துவங்கியது. ரூ.5.19 கோடி மதிப்பில் அந்த விடுதி கட்டி முடிக்கப்பட்டுள்ளது. சுமார் 50 பெண்கள் தங்கும் வகையில் பயோமெட்ரிக் வருகை பதிவு, குடிநீர், கண்காணிப்பு கேமரா வசதியுடன் அமைந்துள்ளது. சமூக நலத்துறையின் கீழ் இந்த விடுதி அமைந்துள்ளது. இந்த விடுதியில் தங்குவதற்கான கட்டணம் உள்ளிட்டவை பற்றிய விபரங்களை இதுவரை வெளியிட வில்லை. கட்டண விபரங்களை அறிவிக்க வேண்டும், விடுதியை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர சமூக நலத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement