கொடுத்த பணத்தை கேட்டவரை காரில் இழுத்து சென்றவர் கைது
மைசூரு: பணம் கொடுத்தவரை, காரின் முன்புற பேனட்டில் வைத்து, 1 கி.மீ., இழுத்து சென்ற சமூக ஆர்வலர் கைது செய்யப்பட்டார்.
கர்நாடகாவின் மைசூரை சேர்ந்தவர் தனஞ்செயா. கடந்த, 2024ல் மனை வாங்குவதற்காக, சமூக ஆர்வலர் கங்கராஜிடம், 20 லட்சம் ரூபாய் கொடுத்திருந்தார். அவரும் பட்டாவை முடித்து தருவதாக உறுதி அளித்திருந்தார்.
ஆனால், சொன்னபடி அவர் செய்யவில்லை. எனவே, கொடுத்த பணத்தை தனஞ்செயா திருப்பி கேட்டும் கொடுக்கவில்லை.
இந்நிலையில், நேற்று முன்தினம், மைசூரு ராமகிருஷ்ணா நகர் துணை பதிவாளர் அலுவலகம் அருகே, கங்கராஜுவை தனஞ்செயா பார்த்தார். அவரிடம் பேச முயற்சித்தார். ஆனால் அவரோ, இவரை பார்த்தும், பார்க்காதது போல காரில் ஏறிக் கொண்டார். அவரின் காரின் முன் தனஞ்செயா நின்றபோது, காரை 'ஸ்டார்ட்' செய்து, முன்னால் நகர்த்தினார்.
அப்போது காரின் பேனட்டில் தனஞ்செய் ஏறிக் கொண்டார். ஆனாலும், கங்கராஜு, காரை நிறுத்தாமல், 1 கி.மீ., துாரம் காரை ஓட்டி சென்றார்.
பின், குவெம்பு போலீஸ் நிலையம் முன் வாகனத்தை நிறுத்தினார். வாகனத்தில் இருந்து இறங்கிய தனஞ்செயா, 'நான் கொடுத்த 20 லட்சம் ரூபாயை திருப்பி கேட்டதால், என்னை கொல்லும் நோக்கில் காரை என் மீது மோத முயற்சித்தார்' என, கங்கராஜ் மீது போலீசில் புகார் செய்தார்.
இதையடுத்து, சமூக ஆர்வலர் கங்கராஜு கைது செய்யப்பட்டார். போலீசார் விசாரிக்கின்றனர்.
-------------------
.
மேலும்
-
விவசாயி தற்கொலை
-
பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில் வசந்த உற்சவம் இன்று துவக்கம்
-
எஸ்.ஆர்.எம்., முத்தமிழ் மேல்நிலை பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி சாதனை
-
தாகூர் மெட்ரிக் பள்ளி மாணவி மாநில அளவில் சாதனை
-
வேலை நிறுத்த உரிமை பாதுகாப்பு சர்வதேச நீதிமன்றம் முக்கிய உத்தரவு
-
ஏர்போர்ட்டில் 'ஏர் இந்தியா' விமானம் விபத்தில் சிக்கியது; 181 பேர் தப்பினர்