வாலிபர் மீது வழக்கு 

அவலுார்பேட்டை: கோழி இறந்து துர்நாற்றம் வீசியதால் ஏற்பட்ட தகராறில் வாலிபரை தாக்கியவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

மேல்மலையனுார் அடுத்த சின்ன நொளம்பை கிராமத்தைச் சேர்ந்தவர் வடமலை மனைவி உண்ணாமலை, 75; இவரது 2 கோழிகள் நேற்று இறந்தது. கோழிகளை நாய் கொண்டு சென்று, அருகில் உள்ள நிலத்தில் போட்டு விட்டதால் துர்நாற்றம் வீசியது.

இதனை பக்கத்து நிலத்துகாரர் பெருமாள், 30; தட்டிக் கேட்டதால் இருதரப்புக்கும் தகராறு ஏற்பட்டது. உண்ணாமலையின் மகன் கருணாகரனை, 43, பெருமாள் தாக்கினார்.

இது குறித்த புகாரின் பேரில் மேல்மலையனுார் போலீசார், பெருமாள் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement