வைகாசி விசாக கொடியேற்றம்
திருவாடானை: ராமநாதபுரம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் இந்த ஆண்டிற்கான வைகாசி விசாக திருவிழா நேற்று காலை 9:30 மணிக்கு கொடியேற்றத்துடன் நடந்தது. ஆதிரெத்தினேஸ்வரர் பிரியாவிடையுடனும், சிநேகவல்லி அம்மன் அலங்காரத்தில் இருந்தனர். முன்னதாக கொடி மரத்திற்கு சிறப்பு அபிேஷகங்கள், ஆராதனைகள் நடைபெற்றன.
தொடர்ந்து மங்கள வாத்தியங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் உச்சரிக்க கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது. கொடிமரத்திற்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. தேவஸ்தான செயல் அலுவலர் பாண்டியன், 22 கிராம நாட்டார்கள் மற்றும் நகர் வளர்ச்சி அறக்கட்டளை குழுவினர் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருவிழா 10 நாட்கள் நடைபெறும். தினமும் இரவில் சுவாமி வீதி உலா நடக்கிறது. முக்கிய நிகழ்வாக மே 29 ல் தேரோட்டம் நடைபெறும்.
மேலும்
-
காங்., அமைச்சர்களுக்கான வரவேற்பை கோஷ்டி பூசலால் புறக்கணித்த தலைவர்கள்
-
சாலைகளில் நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் திண்டாட்டம்
-
போலி கால் சென்டர் மூலம் பண மோசடி: வடமாநிலத்தை சேர்ந்த இருவர் கைது
-
மணல் கடத்தல் இடங்களில் லோக் ஆயுக்தா சோதனை
-
பெங்., விமான நிலையத்தில் 'சேலஞ்சர் 2026' ஒத்திகை
-
தற்கொலைக்கு முயன்ற சிறுமியை காப்பாற்றிய தீயணைப்பு வீரர்கள்