அன்ன வாகனத்தில் வரதராஜ பெருமாள்

பரமக்குடி: பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்ஸவ விழாவில் அன்ன வாகனத்தில் பெருமாள் வலம் வந்தார்.

பெருந்தேவி தாயார் வரதராஜ பெருமாள் கோயில் 224 வது பிரம்மோற்ஸவம் கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் இரவு அன்ன வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் இரட்டை குடைகள் கட்டி வீதி உலா வந்தார். நேற்று காலை ரெங்க மன்னார் அலங்காரத்திலும், இரவு சிம்ம வாகனத்தில் வீற்றிருந்தார். இன்று சேஷ வாகனத்தில் எழுந்தருள உள்ளார். ஏற்பாடுகளை எமனேஸ்வரம் சவுராஷ்டிர சபை நிர்வாகிகள் செய்துள்ளனர்.

Advertisement