சிமென்ட் குடோனாக மாறிய நேர காப்பாளர் அறை

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி பேருந்து நிலைய நேர காப்பாளர் அறையை, சிமென்ட் குடோனாக பேரூராட்சி நிர்வாகம் பயன்படுத்தி வருகிறது.

கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்தில், பயணியர் காத்திருக்கும் அறை அருகே நேர காப்பாளர் அறை உள்ளது. பேருந்து நிலையம் திறந்த நாள் முதல், நேர காப்பாளர் நியமிக்கப்படாததால், அந்த அறை பயன்பாட்டின்றி கிடக்கிறது.

இதை பேரூராட்சி நிர்வாகம் பராமரித்து வருகிறது. மேற்கண்ட நேர காப்பாளர் அறையை, சிமென்ட் குடோனாக பேரூராட்சி நிர்வாகம் பயன்படுத்தி வருவதை கண்ட பயணியர் அதிருப்தி அடைந்துள்ளனர்.

பயணியரின் நலன் கருதி, கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்தில் நேர காப்பாளரை நியமிக்க வேண்டும். குடோனாக உள்ள நேர காப்பாளர் அறையை முறையாக பயன்படுத்த வேண்டும் என பயணியர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement