பஸ்சில் தவற விட்ட ரூ.38,000 போலீசில் ஒப்படைத்த பெண்
ஓசூர் ; சூளகிரி அடுத்த எலசேப்பள்ளியை சேர்ந்தவர் முனிரத்தினா, 28. இவர் தன் கைப்பையில், 38,000 ரூபாயை எடுத்து கொண்டு பேரிகையிலிருந்து அரசு பஸ்சில் சூளகிரிக்கு வந்தார். சூளகிரி பஸ் ஸ்டாண்டில் இறங்கிய அவர், தான் கொண்டு வந்த பணப்பையை மறதியில் இருக்கையிலே விட்டு சென்றுள்ளார். சிறிது நேரத்திற்கு பின் திரும்ப வந்து அங்குள்ளவர்களிடம் கேட்டுள்ளார். யாருக்கும் விபரம் தெரியவில்லை.
இதைய-டுத்து, சூளகிரி போலீசில் புகார் அளிக்க சென்றார். அப்போது, அங்கு சூளகிரி பஜார் தெருவை சேர்ந்த ஜோஸ்வின், 50, என்ற பெண் இருந்துள்ளார். அவர், முனிரத்தினா வந்த பஸ்சில் ஏறியதும், கேட்பாரற்று கிடந்த பணப்பையை சூளகிரி போலீசில் ஒப்படைக்க வந்ததும் தெரிந்தது. விசாரணைக்கு பின், முனிரத்தினாவிடம் பணத்தை ஒப்படைத்த போலீசார், பஸ்சில் கிடந்த பணப்பையை, போலீசில் ஒப்படைத்த ஜோஸ்வி-னுக்கு பாராட்டு தெரிவித்தனர்.
மேலும்
-
ஒரு விசில் சத்தத்துக்கே ஆடிப்போன திராவிட மாடல்: பா.ஜ., கிண்டல்
-
பெரிய நிறுவனங்களுக்கு எளிதாக கடன்; சாமானியருக்கு வழங்குவதில் அலட்சியமா?
-
வி.சி.க., முஸ்லிம் லீக் கட்சிகளை விமர்சித்து தி.மு.க., - எம்.பி., ராஜா ஆபாச கருத்து: பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம்
-
25 மணி நேரம் மின் தடைஅம்மாபேட்டையில் அவதி
-
சூறைக்காற்றால் எஸ்.பி., ஆபீசில் சாய்ந்த மரம்
-
வாலிபர் மூளைச்சாவு: உறுப்புகள் தானம்