திருப்புவனத்தில் மாடுகள் தொல்லை மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை
திருப்புவனம், மே 23-
திருப்புவனம் அரசு மருத்துவமனை வளாகத்தில் தினசரி 20க்கும் மேற்பட்ட மாடுகள் கூட்டம் கூட்டமாக வந்து நிற்பதால் நோயாளிகள் உறவினர்கள் சிரமத்திற்குள்ளாகின்றனர்.
திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு தினசரி அல்லிநகரம், லாடனேந்தல், தட்டான்குளம், மடப்புரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து தினசரி 500க்கும் மேற்பட்ட வர்கள் புற நோயாளிகளாகவும், 50க்கும் மேற்பட்டவர்கள் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெறுகின்றனர். மருத்துவமனை வளாகத்தில் மாடுகள் கூட்டம் கூட்டமாக வலம் வருவதால் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வர சிரமப்படுகின்றன.
மேலும் மாடுகளின் கழிவுகளால் சுகாதார கேடும் நிலவி வருகிறது. பலமுறை மாடுகள் தொல்லை குறித்து புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் இல்லை. இந்நிலையில் மாடுகள் தொல்லையை தவிர்க்க நுழைவு வாயிலில் ஏற்கனவே இரும்பு பைப் பாதிக்கப் பட்டிருந்த நிலையில் முற்றிலும் சேதமடைந்ததால், தற்போது அவற்றை அகற்றி விட்டு புதிய குழாய் பைப் பதிக்கும் பணி தொடங்கியுள்ளது. வழுவழுப்பாக இருப்பதால் மாடுகள் உள்ளே வர முடியாத நிலை ஏற்படும்.
மேலும்
-
ஒரு விசில் சத்தத்துக்கே ஆடிப்போன திராவிட மாடல்: பா.ஜ., கிண்டல்
-
பெரிய நிறுவனங்களுக்கு எளிதாக கடன்; சாமானியருக்கு வழங்குவதில் அலட்சியமா?
-
வி.சி.க., முஸ்லிம் லீக் கட்சிகளை விமர்சித்து தி.மு.க., - எம்.பி., ராஜா ஆபாச கருத்து: பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம்
-
25 மணி நேரம் மின் தடைஅம்மாபேட்டையில் அவதி
-
சூறைக்காற்றால் எஸ்.பி., ஆபீசில் சாய்ந்த மரம்
-
வாலிபர் மூளைச்சாவு: உறுப்புகள் தானம்