பெண்களை இழிவுபடுத்தி திமுக எம்பி ஆ.ராஜா சர்ச்சை பதிவு; குவியும் கண்டனங்கள்

67

நமது சிறப்பு நிருபர்



பெண்களை இழிவுபடுத்தி திமுக எம்பி ஆ.ராஜா சர்ச்சை பதிவு வெளியிட்டதற்கு பல்வேறு கட்சி கண்டனங்கள் தெரிவித்து வருகிறன்றனர். அதன் விபரம்;

பாஜ கண்டனம்



தமிழக பாஜ துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கை: தரம் தாழ்ந்த வார்த்தைகளால் விடுதலை சிறுத்தைகளையும், முஸ்லீம் லீக்கையும் விமர்சித்து விட்டு பின்னர் அதை நீக்கிய ஆ.ராசாவை, இதே கருணாநிதி உயிரோடு இருந்திருந்தால், வேறு யாராவது இதே வார்தைகளை கூறியிருந்தால் என்ன சொல்லியிருப்பார்?

"ஐயோ! கேட்பாரற்று போய் விட்டதா தமிழகம்? ஒரு தலித் என்றும் பாராமல், சிறுபான்மை சமுதாயத்தை எண்ணி பார்க்காமல் இப்படி வசை பாடலாமா?" என்று வசனம் பேசியிருப்பாரே, திருமாவளவன் வானத்திற்கும், பூமிக்கும் குதித்திருப்பாரே? எங்கே? காணோமே? இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

விசிக பொருளாளர் எஸ்.எஸ். பாலாஜி

அதிகாரம் எளியவர்க்கு அதிலென்ன ஆத்திரம்; ஆற்றாமையால் அள்ளிவீசும் அவதூறுகள் அசைத்திடாது. அமைதியாய் கடப்பது அநாகரீகம் தவிர்க்கவே.அநீதி தொடர்ந்து அனைத்தும் உரைத்தால் அணைக்க முடியா அனலில் தகித்து போவீர்.

மார்க்சிஸ்ட் பார்லி குழு தலைவர் வாசுகி

தேர்தல் கூட்டணி, பிரச்னைகளில் கூட்டியக்கம் போன்ற தற்காலிக அரசியல் உறவுகள் எப்போது திருமண அந்தஸ்து பெற்றன? அதிலும் கூட விவாகரத்து உண்டு.. பூ முடித்தவரை புறம் தள்ளி என்பதெல்லாம் ஆணாதிக்கக் கண்ணோட்டத்தில் அழுந்தி கிடக்கும் வார்த்தைகள். என்ன ஆயிற்று?

அமைச்சர் ஆதவ்

திமுக தலைவரும், உதயநிதியும் தேர்தல் தோல்வியில் ஏன் தோற்றோம் என்று இன்னமும் தெரியவில்லை. அரசியலில் ஒரு கட்சியையும், ஒரு தலைவரையும் தாக்கும் போது, ஒரு பெண்ணுடைய உறவை அடிப்படையாக வைத்து விமர்சனத்தை உருவாக்கிக் கொண்டே இருப்பார்கள். அப்படி, ஆ.ராஜா வாயில் சொல்ல முடியாத அளவிற்கு, தலித் சகோதரர்கள் மட்டுமத்த ஒட்டுமொத்த தலைவர்களும் மதிக்கக்கூடிய திருமாவளவனை பார்த்து, ஒரு பதிவை போட்டுள்ளார்.

அந்த வார்த்தையை சொல்வதற்கே தயக்கமாக இருக்கிறது. அந்த வார்த்தைகளை திருமாவளவன், விசிக மீதும் பதிவு செய்தததை கண்டிக்கிறேன். எதிர்க்கட்சி அரசியலை வரவேற்கிறோம். ஆனால், தனிநபர் விமர்சனத்தையோ, ஒரு கட்சியின் தொண்டர்களையோ, ஒரு பெண்ணின் உறவை மையப்படுத்தி பேசுவது, இது அண்ணா, ஈவேரா கற்றுக் கொடுத்தது கிடையாது. திமுகவுக்கு கடமையும், கண்ணியம்,கட்டுப்பாடு கிடையாது. அதனால் தான் இந்த மாதிரி பதிவு பண்ணுகிறார். இதற்கு ஸ்டாலினின் விளக்கம் என்ன. இது மக்களின் தீர்ப்பு, திமுக எதிர்க்கட்சியாக செயல்படும் போது, அதனை அரவணைக்கிறோம்.


எதிரி அரசியல் செய்யாமல், ஸ்டாலினை முதல்வர் வீட்டுக்கே சென்று சந்தித்தார். இந்த ஜனநாயகப் பண்பு புதிதாக தோன்றிய தமிழக வெற்றிக் கழகத்திற்கு இருக்கிறது. ஆனால், 75 ஆண்டு கால பாரம்பரியம் என்று சொல்லக்கூடிய திமுகவுக்கு இல்லை. ஆ.ராசா திருமாவளவனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

திமுக எம்பி கனிமொழி எப்போதும் குரல் கொடுப்பார்கள். திமுகவில் தன்னுடைய சக கட்சி நிர்வாகியின் செயலுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும். இது போன்று சமூக வலைதளங்களில் பெண்கள் குறித்து அவதூறு பேசினால், நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளோம்.

Advertisement