ஸ்ரீபெரும்புதுார் கோட்டத்தில் வரும் 26ல் குறைதீர் கூட்டம்

காஞ்சிபுரம், மே 23–

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம், வரும் 26ம் தேதி நடைபெற உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதுார் ஆகிய இரு வருவாய் கோட்டங்கள் இயங்கி வருகின்றன. இதில், காஞ்சிபுரம் வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர் கூட்டம், நேற்று நடந்தது. அதேபோல், ஸ்ரீபெரும்புதுார் வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர் கூட்டம், வரும் 26ல் நடைபெற உள்ளது.

ஸ்ரீபெரும்புதுார் ஆர்.டி.ஓ., அலுவலக வளாகத்தில் நடக்கும் இந்த கூட்டத்தில் விவசாயிகள் பங்கேற்று, தங்கள் குறைபாடுகளை பதிவு செய்யலாம்.

மேலும், பிரதமர் கவுரவ நிதி பெறுவதற்கு, கட்டாயமாக தனித்துவ விவசாய அடையாள அட்டை பெற வேண்டும். எனவே, ஆதார் எண் இணைத்துள்ள மொபைல் போன் எண்ணை பயன்படுத்தி, மூன்று முறை ஒரு முறை கடவுச்சொல்லை பயன்படுத்தி, தனித்துவ விவசாய அடையாள அட்டை பெறலாம் என, வேளாண் துறையினர் அறிவித்துள்ளனர்.

Advertisement