போலீஸ் செய்திகள்
விபத்தில் ஒருவர் காயம்தேனி: வீரபாண்டி பட்டாளம்மன் கோயில் தெரு மாரிச்சாமி 71. இவர் டூவீலரில் திண்டுக்கல்- குமுளி ரோட்டில் வயல்பட்டி பிரிவு அருகே சென்றார். அவ்வழியாக டூவீலரில் சென்ற ராயப்பன்பட்டி சக்கின்பியோ 19, மாரிச்சாமி டூவீலரில் மோதினார். இந்த விபத்தில் காயமடைந்த மாரிச்சாமி தேனி அரசு மருத்துவக்கல்லுாரியில் சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வீரபாண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
டூவீலர் மாயம் தேனி: காயமகவுண்டன்பட்டி ஈசப்பகவுண்டர் தெரு பிரபாகரன் 33. வீரபாண்டி தற்காலிக பஸ் ஸ்டாண்டில் டூவீலரை நிறுத்தி கோயிலுக்கு சாமி கும்பிட சென்றார். திரும்பி வந்த போது டூவீலரை காணவில்லை. புகாரில் வீரபாண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
தொழிலாளி மாயம்தேனி: தேவதானப்பட்டி அருகே செங்குளத்துப்பட்டியை சேர்ந்தவர் தங்கவேல் 41. போர்வெல் நிறுவனத்தில் வேலை செய்தார். விடுமுறையில் வீட்டிற்கு வந்தவர் திடீரென மாயமானார். அலைபேசியில் தொடர்பு கொண்டும் கண்டு பிடிக்க முடியவில்லை. மனைவி ரூபாதேவி புகாரில் தேவதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர். வி.ஏ.ஓ., டூவீலர் சேதம்தேனி: போடி சொக்கன்சந்து வெங்கடேஸ்வரன். இவர் அம்மாபட்டி வி.ஏ.ஓ.,வாக பணிபுரிகிறார். இவரது வீட்டு முன் டூவீலரை நிறுத்தி இருந்தார். அவரது டூவீலரின் முன்பகுதியை சிலர் சேதப்படுத்தி சென்றனர். வெங்கடேஸ்வரன் புகாரில் போடி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
குடிக்க மறுத்தவருக்கு
கொலை மிரட்டல்தேனி: பெரியகுளம் வடகரை முத்துப்பாண்டி 20. சர்க்கரை ஆலையில் பணிபுரிகிறார். பெரியகுளத்தில் உறவினர் வீட்டு விசேஷம் நடந்து அதற்கு சின்னமனுாரில் இருந்து அஜித், விக்னேஷ் வந்திருந்தனர். அவர்கள் தென்கரை தீர்த்த தொட்டியில் குளிக்க அழைத்து சென்றனர். அங்கு விக்னேஷ், அஜித் மது அருந்தினர். முத்துப்பாண்டியை மதுக்குடிக்கு வற்புறுத்தினர். அவர் மறுக்கவே மதுபாட்டிலால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். காயமடைந்த முத்துப்பாண்டி தேனியில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். புகாரில் தென்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.
பைப் தர மறுத்தவர்
மீது தாக்குதல்தேனி: போடி தாலுகா ஊத்துக்காடு ரமேஷ். ஊத்துக்காடு காளியம்மன் கோயில் திருவிழா தொடர்பாக கூட்டம் நடந்தது. திருவிழா பந்தல் அமைக்க இரும்பு பைப் தருமாறு முருகேசன், ரமேஷிடம் கேட்டார். ரமேஷ் தர மறுத்தார். கூட்டம் முடிந்த பின் முருகேசன், குட்டமணி, கண்ணன் ஆகியோர் ரமேஷை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். ரமேஷ் புகாரில் தென்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.
மேலும்
-
கு.ப.கிருஷ்ணனுக்கு வாரிய தலைவர் பதவி
-
முதல்வர் விஜயுடன் மு.க.அழகிரி மகள் சந்திப்பு
-
ஆதவ் அர்ஜுனாவுக்கு தமிழக பா.ஜ., பதிலடி
-
கோவில் நிதியில் முறைகேடு உரிய நடவடிக்கை தேவை
-
த.வெ.க., வேட்பாளர் மீது தாக்குதல்: சேகர்பாபு மீது கொலை முயற்சி வழக்கு
-
ராமேஸ்வரம் அருகே அனுமதியின்றி ஜெபக்கூட்டம்: அதிகாரிகள் கைவிரிப்பு