கிரீன்டெக் பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு தேர்வில் சாதனை
கடலுார்: கிரீன்டெக் பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் சிறப்பிடம் பிடித்தனர்.
கடலுார் கஸ்டம்ஸ் சாலையில் உள்ள கிரீன்டெக் பள்ளியில் மாணவர் நந்தா 10ம் வகுப்பு தேர்வில் 490 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தார். மாணவர் லாரன்ஸ் 482 மதிப்பெண்கள்; மாணவி நிரஞ்சனா 480 மதிப்பெண்கள் பெற்றனர்.
மாணவி நிரஞ்சனா அறிவியல் பாடத்தில், 100 மதிப்பெண்கள் பெற்றார். 13 மாணவர்கள் 450க்கு மேல் மதிப்பெண் பெற்றனர்.
தேர்வில் சாதித்த மாணவ, மாணவிகளை பள்ளி தாளாளர் அய்யப்பன், செயலாளர் நஜூமுதின், இயக்குனர்கள் உபைதுர் ரஹ்மான், செந்தில்குமார், அரவிந்த், கார்மேல் வின்சென்ட், பள்ளி முதல்வர் சுகந்தி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கட்டுமான பணியில் காணப்படும் தவறான நம்பிக்கைகள்!
-
கட்டடத்தின் மேல்தளத்தில் புதிய வகை 'ஸ்லாப்' அமைக்கலாம்!
-
புதிய வீடு கட்ட எந்த வகை ஒப்பந்தத்தை எப்படி தேர்வு செய்ய வேண்டும்?
-
வீடு கட்டுவதா வாங்குவதாl: குழப்பத்துக்கு தீர்வு என்ன?
-
குறைந்த பரப்பளவு நிலத்தில் நெருக்கடி இல்லாமல் வீடு கட்டுவது அவசியம்!
-
கர்நாடக துணை முதல்வர் கருத்துக்கு முதல்வர் விஜய் ரியாக் ஷன் என்ன?
Advertisement
Advertisement