சஷ்டி வழிபாடு
விருத்தாசலம்: சஷ்டியையொட்டி, விருத்தாசலம் பகுதியில் உள்ள கோவில்களில் முருகன் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் உள்ள வள்ளி தெய்வானை சமேத சண்முக சுப்ரமணியர், 28 ஆகம சன்னதியில் உள்ள குமரேச சுவாமிகளுக்கு சிறப்பு அபி ேஷக, ஆராதனை நடந்தது.
அதேபோல், மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் கோவிலில் சித்தி விநாயகர் சுவாமிக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட திரவிய பொருட்களால் சிறப்பு அபி ேஷகம் நடந்தது.
அதைத்தொடர்ந்து, சித்தி விநாயகர், கொளஞ்சியப்பர் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில், ஏராளமானோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
அதேபோல், மணலுார் ஆதி கொளஞ்சியப்பர், மங்கலம்பேட்டை பால தண்டாயுதபாணி கோவில்களில் சஷ்டி வழிபாடு நடந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மேற்கு ஜெர்மனி கலக்கல்: உலக கோப்பை கால்பந்து
-
விஜய் சங்கர் ஓய்வு: உள்ளூர் கிரிக்கெட்டில் இருந்து
-
தங்கம் வென்றார் தீபக் பாட்: பெடரேஷன் தடகளத்தில்
-
டில்லியில் மே 26ல் குவாட் கூட்டமைப்பு மாநாடு; இந்தோ - பசிபிக் சூழலை விவாதிக்க முடிவு
-
புதிய கட்டத்தை எட்டியது இந்தியா - சைப்ரஸ் உறவு; மோடி முன்னிலையில் பல ஒப்பந்தங்கள் கையெழுத்து
-
மானுவல் நியூயர் காயம்
Advertisement
Advertisement