மாடு மேய்த்த போது விபரீதம் மின்சாரம் பாய்ந்து பெண் பலி

மப்பேடு: மப்பேடு அருகே மாடு மேய்த்துக் கொண்டிருந்த பெண், அறுந்த கிடந்த மின்கம்பியை தொட்ட போது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.

மப்பேடு அடுத்த சத்தரை பகுதியைச் சேர்ந்தவர் துர்கா. இவர், விவசாய நிலத்தில் நேற்று முன்தினம் மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது, விவசாய நிலத்தில் உள்ள மின்மோட்டாரில் இருந்து, கம்பத்திற்கு செல்லும் மின் ஒயரில், மாட்டின் கொம்பு சிக்கியது. இதில், மின் ஒயர் அறுந்து விழுந்தது.

இதையடுத்து, அந்த மின் ஒயரை துர்கா எடுக்க முயன்ற போது, மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்படி, மப்பேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement