'காக்ரோச் ஜனதா கட்சி' சமூக வலைதள இயக்கம்; அன்னிய தலையீடு குறித்து உளவுத்துறை விசாரணை
புதுடில்லி: சமூக வலைதளத்தில் மிக குறைந்த நாட்களில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்களுடன் பிரபலமாகி உள்ள, 'காக்ரோச் ஜனதா பார்ட்டி' என்ற அரசியல் நைய்யாண்டி இயக்கத்தில் அன்னிய நாடுகளின் தலையீடு குறித்து மத்திய உளவுப்பிரிவு அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், சமீபத்தில் ஒரு வழக்கை விசாரிக்கும் போது, 'வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்கள் சிலர் கரப்பான் பூச்சிகளைப் போல உள்ளனர். அவர்களில் சிலர் ஊடகம், சமூக வலைதளம், தகவல் அறியும் உரிமைச் சட்ட செயற்பாட்டாளர் என மாறி, அனைவரையும் தாக்கி பேசுகின்றனர்' என, கூறினார்.
வேலையில்லா இளைஞர்களை கரப்பான் பூச்சியுடன் நீதிபதி ஒப்பிட்டதாக சர்ச்சை எழுந்தது. இதையடுத்து, 'இன்ஸ்டாகிராம்' சமூக வலைதளத்தில், 'காக்ரோச் ஜனதா கட்சி' என்ற 'மீம்' எனப்படும், நையாண்டி கருத்துக்களை படங்களுடன் வெளியிடும் பக்கம் துவங்கப்பட்டது.
இது மிக வேகமாக வளர்ந்து சில நாட்களுக்குள் இன்ஸ்டாகிராமில் மட்டும் 1.50 கோடிக்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்களைப் பெற்றுள்ளது. நாட்டில் உள்ள எந்த கட்சிக்கும் சமூக வலைதளத்தில் இவ்வளவு பின்தொடர்பவர்கள் இல்லை.
குறுகிய காலத்தில் மிக வேகமாக வளர்ந்ததால், இது குறித்து இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனமான, 'மெட்டா' மத்திய அரசுக்கு தகவல் தந்தது.
மெட்டாவின் இந்திய செயல்பாடுகளை கண்காணிக்கும் அதிகாரி ஒருவர் இது குறித்து கூறுகையில், 'எங்கள் தளத்தில் ஏதேனும் ஒரு பக்கத்திற்கு திடீரென பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தால், விசாரணை செய்து உடனடியாக அரசுக்கு எச்சரிக்கை விடுப்போம். காக்ரோச் ஜனதா கட்சி விவகாரத்திலும் இதை செய்தோம்' என்றார்.
ஐ.பி., எனப்படும் மத்திய உளவுத்துறை மற்றும் சமூக வலைதளங்கள், டிஜிட்டல் வடிவிலான தகவல் தொடர்புகளை கண்காணிக்கும் தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைப்பு ஆகியவை காக்ரோச் ஜனதா பார்ட்டி குறித்து விசாரணை நடத்தி வருகின்றன.
அவர்கள் கூறியதாவது:
காக்ரோச் ஜனதா கட்சி என்ற பக்கம், 'ஆம் ஆத்மி - குஜராத்' என்ற பக்கமாக இருந்துள்ளது. கடந்த 21ல் காக்ரோச் ஜனதா கட்சி என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இந்த பக்கத்தை உருவாக்கியவர் அபிஜித் தீப்கே. இவர் 2020 - -23 காலகட்டத்தில் ஆம் ஆத்மி கட்சியில் சமூக வலைதள வியூக வகுப்பாளராக இருந்தவர். தேர்தல் பிரச்சாரத்திலும் ஈடுபட்டுள்ளார்.
ஒரு அரசியல் கட்சியின் வட்டார அளவிலான ஆதரவு பக்கம், திடீரென நாடு தழுவிய அளவில் அரசுக்கு எதிரான, 'மீம்ஸ்' இயக்கமாக மாறி, சில நாட்களிலேயே கோடிக்கணக்கான பின்தொடர்பாளர்களை ஈர்த்தது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு போன்ற இளைஞர்களை உணர்ச்சிவசப்பட வைக்கும் முக்கிய பிரச்னைகளை மையமாக வைத்து, நகைச்சுவை, நைய்யாண்டி என்ற போர்வையில் இளைஞர்களைத் திரட்டுகின்றனர்.
அவர்களை வீதிக்கு கொண்டு வந்து போராட்டம் நடத்த வைக்க திட்டமிட்டிருக்கலாம். இந்த அமைப்புடன் தொடர்புடைய, 'டெலிகிராம்' மற்றும் பிற சமூக வலைதள சேனல்களில் பாகிஸ்தான் உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த கணக்குகளின் நடமாட்டமும் கண்டறியப்பட்டு, விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதுபோன்ற இயக்கங்கள் அரசு மீதான மக்களின் நம்பிக்கையை படிப்படியாக பலவீனப்படுத்தி, நாட்டில் ஒரு ஒழுங்கற்ற பயத்தையும், ஸ்திரமற்ற தன்மையையும் பரப்பி வருகின்றன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
@block_B@
காக்ரோச் ஜனதா கட்சி சமூக வலைதள பக்கத்தை இன்ஸ்டாகிராமில் தொடர்பவர்களின் எண்ணிக்கை நேற்று 2 கோடியை கடந்தது. இது குறித்து பா.ஜ., இளைஞர் அணியை சேர்ந்த தஜீந்தர் பகா வெளியிட்ட பதிவில், காக்ரோச் ஜனதா கட்சி பக்கத்தை பின் தொடர்பவர்களில் 50 சதவீதத்தினர் பாகிஸ்தானியர்கள் எனவும், ஒன்பது சதவீதத்தினர் மட்டுமே இந்தியர்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த கருத்தை மறுத்துள்ள காக்ரோச் ஜனதா கட்சி பக்கத்தின் நிறுவனர் அபிஜித், இன்ஸ்டாகிராமில் இருந்து தகவலை பகிர்ந்துள்ளார். அதில் பக்கத்தை பின் தொடர்பவர்களில் 94 சதவீதத்தினர் இந்தியாவில் இருந்து செயல்படுகின்றனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.block_B
. ரூ. நூறை எட்டும் டாலர், நிகர நேரடி வெளிநாட்டு முதலீடு 22 மாதங்களாக zero.சூன்யம். RBI தரவுகளின் படி, சராசரி இந்திய குடும்பத்துன் சேமிப்பு வெறும் 5% ஆக சரிந்துள்ளது.நடுத்தர வர்க்க வருமானம் தேக்கமடைந்து உள்ளது, வேலையின்மை 7% அளவில் ஏற்றம் கண்டுள்ளது. பணவீக்கம் 5% சதவீதமாக உயர்ந்து வருகிறது. விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து உள்ளது.எல்லாம் சாதனைகளாக இருப்பதால் தான் ஜீக்கு மெடல் மேலே மெடல். கேள்வி கேட்டால் கரப்பான்பூச்சி என்று பட்டம்.
நான் மறுபடியும் கூறுகிறேன். சமூக ஊடங்களுக்கு கடிவாளம் போடவேண்டிய சூழ்நிலை உள்ளது. சமூக வலைத்தளம் மற்றும் பக்கங்கள் தனியாக பிரிக்கப்படவேண்டும். இளைஞர்கள் வயது வாரியாக பிரித்து அதற்கு தனி டொமைன் வழங்கி கண்காணிக்கப்படவேண்டும். தேர்தல் ஆணையமும் சமூக ஊடகங்களுக்கு விதிமுறைகள் கடுமையாக வகுக்க வேண்டும். மொபைல் என்பது தனிப்பட்டவர்கள் பயன்பாடு இதில் மாணவர்களும் இளைஞர்களும் தங்கள் வாழ்கையை வீணாக்குவதோடு மட்டுமல்லாமல் நாட்டிற்கும் அச்சுறுத்தலாக இருக்கிறது. ஒரு பகுதியில் நாலு பேர் சொல்லும் கருத்தை உள்வாங்கி மதிப்பீடு செய்யும் பழக்கம் ஒழிந்து இன்று ஒருவர் சொல்வதை 4 பேர் கேட்க்கும் நிலை மாறியுள்ளது. இது பெரும்பாலும் நமது கலாச்சாரத்தை சீரழிக்கிறது. சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது சமூக தளங்கள்.
இதனால்தான் மோடி அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டி அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சென்று மக்களைத் திருப்திப் படுத்த வேண்டும் என்றாரோ ????
அடுத்த தேர்தலில் எப்படி Gen-Z கரப்பான்பூச்சிகளை பாஜக சமாளிக்கும்? ஆன்டி நேஷனல் ஊஃபா, நக்சல், போன்ற சட்டங்களை வைத்தா?
இது நல்லதிர்க்கல்ல அரசு கவனம் நிச்சயம் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். சில எதிர் கட்சி தலைவர் இதில் வரும் செய்த்தியை உண்மை போல் பறை சாற்று கிறார்.
சிறையில் அடைக்க வேண்டும்மேலும்
-
ரூ.2,400 கோடி வருவாய் ஈட்டிய காமராஜர், சென்னை துறைமுகங்கள்
-
பாலியஸ்டர் நுால் விலை அதிகரிப்பால் பருத்தி நுாலிழை இறக்குமதி உயர்வு சர்வதேச சந்தையில் எதிர்பாராத திருப்பம்
-
மத்திய அரசுக்கு ரூ.2.87 லட்சம் கோடி ஈவு தொகை வழங்கியது ரிசர்வ் வங்கி
-
நெய், வெண்ணெய் விற்பனை மந்தம்
-
டில்லியில் குவாட் கூட்டமைப்பு மாநாடு இந்தோ - பசிபிக் சூழலை விவாதிக்க முடிவு
-
பாகிஸ்தானுக்கு ரகசிய உளவு பார்த்தவர்...கைது! ராணுவ நடமாட்டத்தை நோட்டம் விட்டது அம்பலம்