டெக்னிக்கல் அனாலிசிஸ் : காளையின் வலிமை குறைந்தே காணப்படுகிறது

நேற்று 16 புள்ளிகள் ஏற்றத்துடன் ஆரம்பித்த நிப்டி, கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றம் கண்டு, மதியம் ஒரு மணியளவில் 176 புள்ளிகள் வரை உயர்ந்தது. அதன் பின்னர் இறங்க ஆரம்பித்து, நாளின் இறுதியில் 64 புள்ளிகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. 18 பரந்த சந்தை குறியீடுகளில், 13 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 5 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன.

இவற்றில் 'நிப்டி100' குறியீடு அதிகபட்சமாக 0.30 சதவீத ஏற்றத்துடனும்; 'நிப்டி ஸ்மால்கேப் 50' குறியீடு அதிகபட்சமாக 0.24 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தன. 21 துறை சார்ந்த குறியீடுகளில், 10 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 11 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன.

இவற்றில் 'நிப்டி பிரைவேட் பேங்க்' குறியீடு அதிகபட்சமாக 1.49 சதவீத ஏற்றத்துடனும்; 'நிப்டி ஹெல்த்கேர்' குறியீடு அதிகபட்சமாக 1.52 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தன. வர்த்தகம் நடந்த 3,367 நிறுவன பங்குகளில், 1,744 ஏற்றத்துடனும்; 1,522 இறக்கத்துடனும்; 101 மாற்றம் ஏதும் இல்லாமலும் நிறைவடைந்திருந்தன.
Latest Tamil News

Tamil News
Tamil News
Tamil News
Tamil News



நிப்டியின் டெக்னிக்கல் செட்டப்பில் பெரிய மாற்றம் ஏதும் நடந்துவிடவில்லை. மொமெண்டம் இண்டிகேட்டர்களான 'எம்.ஏ.சி.டி., மற்றும் ஆர்.எஸ்.ஐ.,' காளைகளின் வலிமை தொடர்ந்து குறைந்த நிலையிலேயே இருப்பதை காட்டுகின்றன. 23,560ல் நல்லதொரு சப்போர்ட்டும், 23,900ல் வலுவான ரெசிஸ்டென்ஸும் காணப்படுகிறது. 23,560ஐ உடைத்து கீழே சென்றால், 23,350 எனும் எல்லை வரை செல்லக்கூடும். 23,900-ஐ உடைத்து மேலே சென்றால், 24,050 என்பது அடுத்து தொடக்கூடிய எல்லையாக இருக்கும். உலக சந்தை நகர்வுகள் மற்றும் செய்திகளே அடுத்தகட்ட நகர்வை தீர்மானிக்கும்.

Advertisement