பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக அராஜக செயல்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை: முதல்வர் விஜய் உறுதி
சென்னை: பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக அராஜக செயல்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை பெற்றுத்தர தமிழக அரசு உறுதியுடன் செயல்படும் என்று முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவரது அறிக்கை;
கோவையில் நேற்று 10 வயது சிறுமிக்கு நிகழ்ந்த கொடூர சம்பவம் மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. இத்தகைய மனிதநேயமற்ற மற்றும் மன்னிக்க முடியாத குற்றச் செயல்கள் நமது சமூகத்தில் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாது.
தங்கள் உயிருக்குயிரான குழந்தையைப் பிரிந்து வாடும் சிறுமியின் குடும்பத்தைச் சார்ந்த சொந்தங்களுடன் எனது ஆழ்ந்த துயரத்தைப் பகிர்ந்துகொள்கிறேன்.
இந்த வழக்கில் தொடர்புடையதாக இரண்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்துத் தீவிர மற்றும் விரைவான விசாரணை மேற்கொண்டு, குற்றப்பத்திரிகையை உடனடியாக தாக்கல் செய்யத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் இத்தகைய அராஜக செயல்களில் ஈடுபடுவோருக்கு சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனை பெற்றுத்தர தமிழக அரசு உறுதியுடன் செயல்படும். இதற்கான உடனடி மற்றும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
இவ்வாறு முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.
இங்கதான் நீங்க யோகியை பின்பற்ற வேண்டும். அந்த கயவனை என்கவுண்டரில் போட்டு தள்ளுங்கள். அவன் வீட்டை தரைமட்டமாக்குங்கள்.
தவறு செய்தது உறுதியானால்....... அடுத்த முறை மற்றவர்கள் தவறு செய்ய யோசிக்க வேண்டும்..... அப்படிப்பட்ட தண்டனை கொடுக்கவேண்டும்......
காவல் துறையில் காலி இடங்களை நிரப்பி ...... அவர்களை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கப்படவேண்டும்.... கண்காணிப்புடன்.....
ப்ளீஸ் விஜய், அந்த ரெண்டு பேரையும் சுட்டுத்தள்ள உத்தரவு போடுங்க. இல்லனா நீ வேஸ்ட்.
தமிழ்நாட்டையே உலுக்கியுள்ள கோவை சிறுமி கொலை ....குழந்தையின் தலைமுடியை வைத்தே கழுத்தை இறுக்கியுள்ளனர்......சிறுமியின் முகமே சிதைந்து அடையாளம் தெரியாமல் கொடூர கொலை ....உங்கள் வீட்டிலும் குழந்தைகள் இருக்கிறார்கள், உங்களுக்கு கொதிக்கவில்லையா? என பெண்கள் ஆதங்கம்...இதற்கு காரணம் நிச்சயம் கஞ்சா போதை .......இங்கே உள்ளது போதாது என்று இப்பொது ஆந்திர சாராய அதிபர் அரசு ஆலோசகராக புதிதாக நியமனம் ....தமிழ் நாடு என்ன கஞ்சா சாராய அதிபர்கள் வேட்டைக்காடா ??.....இதற்கு இந்த லாட்டரி அரசு பதில் சொல்லட்டும் ....
வணக்கம். முதல்வர் அண்ணா தெறி பட பெண்கள் ,குழந்தைகள், பாலியல் சம்பவத்திற்கு தண்டனை தேவை.
பல கொடூர கொலை கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து நடக்கிறது .....இதை கேள்வி கேட்காமல் கையில் மொபைல் போன் , ஆபாச படங்கள் , சாராயம் போதை அதனால் மக்களாக பார்த்து திருந்தாத வரையில் இதை ஒன்றும் செய்ய முடியாது என்று இங்கு சிலர் சப்பை கட்டு .....ஊரெங்கும் டாஸ்மாக் திறந்தது யார் ??....மக்களா திறக்க சொன்னார்கள் ??....அதை விட கேவலம் கஞ்சா மெத்து போதை ...இதற்கும் மக்கள்தான் காரணமா?? ....இங்கே உள்ளது போதாது என்று இப்பொது ஆந்திர சாராய அதிபர் அரசு ஆலோசகராக புதிதாக நியமனம் ....இதற்கும் மக்கள்தான் காரணமா ??.....இதற்கு இந்த லாட்டரி அரசு பதில் சொல்லட்டும் ....
நேற்று இன்று அடுத்தடுத்து 2 கொலைகள் ....சென்னை, மணலி புதுநகர் அருகே அடுத்தடுத்து 2 கொலைகள் நடந்ததால் பெரும் பரபரப்பு..... நேற்று இரவு மணலி புதுநகர் அருகே ரவுடி பிரசாந்த் வெட்டிக் கொல்லப்பட்ட நிலையில், இன்று விச்சூர் கிராமத்தில் இளைஞர் விஜய் 21 ஓட ஓட வெட்டிக்கொலை ......இவ்வளவு கேவலமான சட்டம் ஒழுங்கு ...
பதவி ஏற்று 10 நாட்களில் 38 கொலைகள்.. ஒரே வாரத்தில் இவ்வளவு கொலைகள் .....இதில் சிறுமிகள் , இளம் பெண்கள் , வாய் பேச முடியாத பெண்கள் என அனைவரும் அடக்கம்.. ...மிக கேவலமான நிலைமையில் சட்டம் ஒழுங்கு .....இதை கேள்வி கேட்க இங்கு எதிர் கட்சி என்று நாதி இல்லை ...
இதையே தான் உனக்கு முன் இருந்தவரும் வாய்ச்சவடால் விட்டுக்கொண்டிருந்தார்.... விஷ ஜந்துக்களை புழக்கடையில் வளர்ப்பது போல உன் கட்சியினரையும், உன்னோட ஆட்சிக்கு ஆதரவு தரும் கட்சியினரையும் பார்த்தாலே தெரிந்துவிடும் சட்டம் ஒழுங்கு எந்த லட்சணத்தில் இருக்கும் என்று.மேலும்
-
எபோலா நோய்த்தொற்று பரவல்; அவசரகால நிதியிலிருந்து ரூ.574 கோடி ஐநா ஒதுக்கீடு
-
பேரின்ப பெருவெள்ளத்தில் கலந்த சுவாமிகள்
-
13 கிலோ புகையிலை பறிமுதல்: ஒருவர் கைது
-
பாலிசி மாற்றுவதில் சேவை குறைபாடு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிப்பு
-
பட்டு சேலை புரோக்கர்கள் மீது நடவடிக்கை தேவை காந்தி சாலை வியாபாரிகள் சங்கம் கலெக்டரிடம் மனு
-
தனியார் பள்ளி வாகன ஓட்டுநர்களுக்கு மாதந்தோறும் கண் பரிசோதனை அவசியம் திருவள்ளூர் கலெக்டர் அறிவுரை