கந்தசுவாமி கோவில் நடைபாதையில் வெப்பத்தை சமாளிக்க வெள்ளை பெயின்ட்
திருப்போரூர்:திருப்போரூர் கந்தசுவாமி கோவில் வளாகத்தில் வெப்பத்தை சமாளிக்க நடைபாதையில் வெள்ளை பெயின்ட் அடிக்கப்பட்டுள்ளது.
திருப்போரூரில் பிரசித்தி பெற்ற கந்தசுவாமி கோவில் உள்ளது. இங்கு பல்வேறு பகுதிகளிலிருந்து தினமும் 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து சுவாமிய தரிசிக்கின்றனர். பக்தர்களின் வசதிக்காக கோவில் வளாக பகுதிகளில் நிழற்கூரைகள், உள் பகுதியில் மின் விசிறி வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது கோடைகாலம் என்பதால், வழக்கத்தை விட பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
சில இடங்களில் பக்தர்கள் நடந்து செல்லும்போது வெயில்தாக்கம் அதிகரித்து அவதிப்பட்டனர். எனவே, பக்தர்கள் தரையில் வெள்ளைபெயின்ட் அடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து கோவில் நிர்வாகத்தினர், பக்தர்களின் நலன் கருதி நடைபாதையில் வெப்பம் தெரியாத வகையில் வெள்ளை பெயின்ட் அடிக்கப்பட்டது.
மேலும்
-
மழைநீர் கால்வாய் அமைப்பதில் அலட்சியம் மர்ம காய்ச்சலால் பெண் பாதிப்பு
-
திருத்தணி கோவிலில் குவிந்த பக்தர்கள் 2 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
-
கும்மிடி புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகள் முடக்கம்
-
வாலாஜாபாதில் சமுதாய கழிப்பறையை பயன்பாட்டிற்கு கொண்டுவர மக்கள் வலியுறுத்தல்
-
உழந்தை ஏரியை சுற்றி வேலி அமைப்பு
-
ஆகாய தாமரை அகற்றம், கொசு ஒழிப்பில் பின்னடைவு பகிங்ஹாம் கால்வாய், அடையாறு ஆறு துாய்மை பணி மந்தம்