கும்மிடி புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகள் முடக்கம்
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டியில், 7.29 கோடி ரூபாய் செலவில் தொடங்கப்பட்ட புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகள், மூன்று மாதங்களாக முடங்கி உள்ளன.
கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியில் பேருந்து நிலையம் அமைந்துள்ளது. குறுகலான பேருந்து நிலையம் என்பதால், பேருந்துகள் உள்ளே சென்று வெளியே வருவதில் சிரமம் ஏற்படுகிறது.
மேலும் நகருக்குள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண, புதிய பேருந்து நிலையம் கட்ட முடிவு செய்யப்பட்டது. புதிய பேருந்து நிலையம் அமைக்க, சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையோரம், பெத்திக்குப்பம் பகுதியில், சர்வே எண்: 173/1 ஏ1ல், 1.80 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது.
கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 7.29 கோடி ரூபாய் செலவில், அந்த இடத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது. கும்மிடிப்பூண்டி பேரூராட்சி நிர்வாகம் சார்பில், கட்டுமான பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா, 2025 செம்டம்பர் 25ம் தேதி நடந்தது.
கும்மிடிப்பூண்டி புதிய பேருந்து நிலையத்தில், சுற்றுச்சுவருடன் ஒரே நேரத்தில், 17 பேருந்துகள் நிற்கும் வசதி, காத்திருப்போர் அறைகள், நேர காப்பாளர் அறை, உதவி மையம், 17 கடைகள் கொண்ட வணிக வளாகம், டூ - வீலர், ஆட்டோ மற்றும் கார்களுக்கான தனி பார்க்கிங் வசதி, பாலுாட்டும் அறை, கழிப்பறைகள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.
அடிக்கல் நாட்டிய நாளில் இருந்து, 18 மாதங்களுக்குள் பேருந்து நிலைய பணிகள் நிறைவு பெறும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், அடிக்கல் நாட்டப்பட்டு, எட்டு மாதங்களை கடந்த நிலையில், மூன்று மாதங்களாக பணிகள் மேற்கொள்ளாமல் முடங்கியுள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
எனவே, கும்மிடிப்பூண்டி பேரூராட்சி நிர்வாகம் துரிதமாக செயல்பட்டு, முடங்கிய கட்டுமான பணிகளை விரைந்து மேற்கொண்டு, நிர்ணயித்த காலத்திற்குள் பணிகளை முடிக்க வேண் டும் என, அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலும்
-
பெண்கள் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு பிரச்னை; முதல்வர் விஜய் ஆலோசனை
-
இதுதான் தவெகவின் மாற்று அரசியலா? கேட்கிறார் நயினார் நாகேந்திரன்
-
மஹாராஷ்டிராவில் கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து; 8 பேர் பலி
-
சனாதனத்தை அறிந்து கொள்ளுங்கள்: உதயநிதிக்கு ஸ்ரீதர் வேம்பு அறிவுரை
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு
-
போதைப்பொருள் கடத்தல்காரர்கள் சுதந்திரமாக நடமாடுகிறார்கள்: அண்ணாமலை குற்றச்சாட்டு