உழந்தை ஏரியை சுற்றி வேலி அமைப்பு

புதுச்சேரி: உழந்தை ஏரியை சுற்றி வேலி அமைக்க நடப்பட்டுள்ள சிமென்ட் கட்டையில் வெள்ளை வர்ணம் அடிக்கும் பணி நடந்து வருகிறது.

புதுச்சேரி, அரும்பார்த்தபுரம் பைபாசையொட்டி, உழந்தை ஏரி அமைந்துள்ளது. ஏரியில் உள்ள தண்ணீரை சுத்தமாக பாதுகாப்பதற்காக பொதுப்பணித்துறை சார்பில், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, இரும்பு வேலி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்கான  பணி தீவிரமாக நடந்து வருகிறது. வேலி அமைப்பதற்காக சிமெண்ட் கட்டைகள் நடும் பணி முடிந்துள்ளது. சிமென்ட் கட்டைகள் முழுதும் வெள்ளை வர்ணம் அடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. வெள்ளை வர்ணம் அடித்தவுடன், இரும்பு வேலி அமைக்கும் பணி நடைபெறும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement