வாலாஜாபாதில் சமுதாய கழிப்பறையை பயன்பாட்டிற்கு கொண்டுவர மக்கள் வலியுறுத்தல்
வாலாஜாபாத்: வாலாஜாபாதில் பயன்பாடு இல்லாமல் வீணாகி வரும் சமுதாய கழிப்பறையை பயன்பாட்டிற்கு கொண்டுவர அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
வாலாஜாபாதில் வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரே 10வது வார்டில் போஜக்காரத் தெரு உள்ளது. இத்தெருவின் துவக்கப் பகுதியில் பேரூராட்சிக்கு சொந்தமான சமுதாய கழிப்பறை கட்டடம் உள்ளது.
இந்த சமுதாய கழிப்பறை கட்டடம் அருகாமையில் சார் - பதிவாளர் அலுவலகம், பேரூராட்சி அலுவலகம், கருவூலம் மற்றும் காவல் நிலையம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் இயங்குகின்றன.
இந்த அலுவலகங்கள் சார்ந்த பல்வேறு பணிகள் காரணமாக வரும் பொது மக்கள் போஜக்காரத் தெரு தொடக்கத்தில் உள்ள சமுதாய கழிப்பறை கட்டடத்தை இயற்கை உபாதைக்கு பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில், ஓராண்டாக இந்த கழிப்பறை கட்டடம் முறையான பராமரிப்பின்றி, தண்ணீர் வசதியற்று பயன்பாடு இல்லாமல் உள்ளது.
இதனால், சார் - பதிவாளர் அலுவலகம், கருவூலம், அரசு வட்டார பொது மருத்துவமனை உள்ளிட்ட அலுவலகங்களுக்கு சென்று வருவோர் அவசர நேரங்களில் இயற்கை உபாதைக்கு ஒதுங்க முடியாத நிலை இருந்து வருகிறது.
எனவே, பொது மக்களின் நலன் கருதி, வாலாஜாபாத் போஜக்காரத் தெருவில் வீணாக உள்ள சமுதாய கழிப்பறை கட்டடத்தை பயன்பாட்டிற்கு விட வேண்டும் என, அப்பகுதி மக்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும்
-
பெண்கள் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு பிரச்னை; முதல்வர் விஜய் ஆலோசனை
-
இதுதான் தவெகவின் மாற்று அரசியலா? கேட்கிறார் நயினார் நாகேந்திரன்
-
மஹாராஷ்டிராவில் கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து; 8 பேர் பலி
-
சனாதனத்தை அறிந்து கொள்ளுங்கள்: உதயநிதிக்கு ஸ்ரீதர் வேம்பு அறிவுரை
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு
-
போதைப்பொருள் கடத்தல்காரர்கள் சுதந்திரமாக நடமாடுகிறார்கள்: அண்ணாமலை குற்றச்சாட்டு