கோவையில் கொல்லப்பட்ட சிறுமி குடும்பத்துக்கு விஜய் போனில் ஆறுதல்

12

கோவை: கோவையில் கொல்லப்பட்ட சிறுமி குடும்பத்துக்கு விஜய் போனில் ஆறுதல் தெரிவித்தார். அப்போது அனைத்து உதவிகளும் செய்யப்படும் என விஜய் உறுதி அளித்துள்ளார்.

கோவை சூலூர் அருகே கொலை செய்யப்பட்ட 10 வயது சிறுமியின் சடலம் நேற்று மாலை அவர்களது சொந்த ஊரான சேலம் மாவட்டம் கொளத்தூர் ஒன்றியம் உக்கம்பட்டி காடு கிராமத்தில் தகனம் செய்யப்பட்டது. இன்று சிறுமியின் வீட்டுக்கு சென்ற தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் சிறுமியின் தந்தைக்கு ஆறுதல் கூறி வீடு கட்ட நிலம் தருவதாக கூறினர்.

அதனைத் தொடர்ந்து சேலம் கலெக்டர் இளம்பகவத், போக்குவரத்து துறை அமைச்சர் பார்த்திபன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் ஆகியோர் சிறுமியின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினர். அதனை தொடர்ந்து தமிழக முதல்வர் விஜய் மொபைலில் சிறுமியின் தந்தையிடம் பேசினார். பின்பு தமிழக அரசு சார்பில் 7 லட்சம் ரூபாய் காசோலையை அமைச்சர், கலெக்டர் சிறுமியின் தந்தையிடம் வழங்கினர்.


@block_Y@

முதல்வர் விஜய் உறுதி

சிறுமியை வன்கொடுமை செய்து கொன்றவனுக்கு கடும் தண்டனை பெற்றுத்தருவதாக முதல்வர் விஜய் உறுதி அளித்தார்; என சிறுமியின் பாட்டி நிருபர்களிடம் தெரிவித்தார். block_Y


ஏற்கனவே பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக அராஜக செயல்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை பெற்றுத்தர தமிழக அரசு உறுதியுடன் செயல்படும் என்று உறுதியளித்த முதல்வர் விஜய் கோவையில் சிறுமிக்கு நிகழ்ந்த கொடூர சம்பவம் குறித்து மிகுந்த வேதனை தெரிவித்தார்.

தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!

கோவை சிறுமி பெற்றோரிடம் உடைந்து பேசிய முதல்வர் விஜய்; தினமலர் வெப்சைட், யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு


வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

Advertisement