மாநகர சாலைகளின் தரம் மோசம் சீரமைக்க போலீஸ் பரிந்துரை
கோவை: கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த சாலை பாதுகாப்பு கமிட்டி கூட்டத்தில், போலீஸ் தரப்பில் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைகள்:
* ஆத்துப்பாலம் முதல் உக்கடம் வரையிலான சாலையில் பழுதடைந்த இடங்களில் சீரமைக்க வேண்டும்.
* எல்.ஐ.சி., ரோடு முதல் பார்க் கேட் ரோடு வரை மையத்தடுப்பு அமைக்க வேண்டும். நேரு ஸ்டேடியம் செல்வதற்கு மையத்தடுப்பில் இடைவெளி விட வேண்டும். வாகனங்களுக்கு இடையூறாக இருப்பதால், முக்கோண வடிவ பகுதியை அகற்ற வேண்டும்.
* வடவள்ளி ரவுண்டானாவில் மருதமலை செல்லும் சாலை, மருதமலையில் இருந்து வரும் சாலை, இடையர்பாளையம் செல்லும் சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும்.
* வெயில் கடுமையாக இருப்பதால் அனைத்து தானியங்கி சிக்னல்களிலும் பசுமை பந்தல் மாநகராட்சி அமைத்து தர வேண்டும்.
* அவிநாசிலிங்கம் பள்ளி மற்றும் கல்லுாரி முன் பாதசாரிகள் கடக்கும் குறியீடு வரைய வேண்டும்.
* சவுரிபாளையத்தில் செயின்ட் பிலோமினா பள்ளி மற்றும் அருகே உள்ள துவக்கப் பள்ளி முன்புள்ள சாலையை சீரமைக்க வேண்டும்.
* மேட்டுப்பாளையம் ரோட்டில் கிறிஸ்தவ மயானத்துக்கு அருகே நடுரோட்டில் பள்ளம் ஏற்பட்டிருக்கிறது.
* மேட்டுப்பாளையம் ரோட்டில் கவுசிகா நதி பாலம் முதல் நரசிம்மநாயக்கன்பாளைம் வரை ரோட்டின் நடுவே உள்ள தடுப்பு சுவர் உயரம் குறைவாக உள்ளது. வாகன ஓட்டிகள் தடுப்புச்சுவரை கடந்து மறுபக்கம் உள்ள சாலைக்குச் செல்வதால் விபத்து ஏற்படுகிறது. தடுப்புச்சுவர் உயரத்தை அதிகப்படுத்த வேண்டும்.
இவ்வாறு, போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
@block_B@ விபத்துக்கு காரணமாகிறது மையத்தடுப்பு இடைவெளி மாநில நெடுஞ்சாலைத்துறை சாலை பாதுகாப்பு குழு கொடுத்த பரிந்துரையில், ‘பாலக்காடு ரோட்டில் குனியமுத்துாரில் பெட்ரோல் பங்க் எதிரே உள்ள மையத்தடுப்புகளில் அனுமதியற்ற இடைவெளி இருக்கிறது; பொதுமக்கள் ரோட்டை கடக்கும்போது விபத்து ஏற்படுகிறது. அனுமதியற்ற இடைவெளியை மூட வேண்டும். வடமதுரை, என்.ஜி.ஜி.ஓ., காலனி, விஸ்வநாதபுரம் சந்திப்புகளில் பஸ் ஸ்டாப்புகள், பாதசாரிகள் கடப்பதற்கு குறியீடு இல்லை. வாகனங்களை வேகத்தை குறைக்காமல் செல்வதால் பாதசாரிகள் கடப்பதற்கு சிரமப்படுகின்றனர். சங்கனுார் ரோடு கண்ணப்பன் நகர் சந்திப்பில் இருந்து மேட்டுப்பாளையம் ரோடு செல்லும் வழியில் உள்ள, ரயில்வே கிராஸிங் அருகில் இருபுறமும் ஆபத்தான பள்ளம் இருக்கிறது; ‘மெட்டல் கிராஸ் பேரியர்’ அமைக்க வேண்டும்’ என கூறியுள்ளனர்.block_B
மேலும்
-
கேபிள் கார் கோளாறால் அந்தரத்தில் தவித்த 300 பேர்; பத்திரமாக மீட்டது மீட்பு படை
-
சிறைக்குள் கஞ்சா பந்து வீசியது குறித்து விசாரணை
-
17 இன்ஸ்பெக்டர்கள் சேலத்துக்கு இடமாற்றம்
-
தப்பிய ஆயுள் தண்டனை கைதியை கோவை சிறைக்கு மாற்ற பரிசீலனை
-
அனுமதியின்றி செயல்பட்ட இரு குவாரிகள் மீது அதிகாரி புகார்
-
மரங்கள் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு