பாலக்காடு கலெக்டராக சுதீர் பொறுப்பேற்பு

பாலக்காடு: பாலக்காடு மாவட்ட புதிய கலெக்டராக சுதீர் நேற்று பொறுப்பேற்றார்.

பாலக்காடு கலெக்டர் உட்பட, 6 மாவட்ட கலெக்டர்கள் இடமாற்றம் செய்து அரசு உத்தரவு பிறப்பித்தது. பாலக்காடு கலெக்டராக இருந்த மாதவிகுட்டி கோழிக்கோடு மாவட்ட கலெக்டராக மாற்றப்பட்டுள்ளார். பாலக்காடு மாவட்ட கலெக்டராக சுதீர் நேற்று பொறுப்பேற்றுள்ளார்.

திருவனந்தபுரத்தை சேர்ந்த சுதீர், கடந்த, 2018ல் ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக பதவி உயர்வு பெற்றார். எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் துறையில் பி.டெக்., பட்டம் பெற்றுள்ளார்.

இவர், மாநில அரசின் நுழைவுத் தேர்வு ஆணையர், சிவில் சர்வீஸ் அகாடமி இயக்குனர், கைத்தறித் துறை இயக்குனர்,​சிறுபான்மையினர் நல மேம்பாட்டு இயக்குனராக பணியாற்றி உள்ளார். கடந்த 2023ம் ஆண்டு முதல் உயர் கல்வித்துறையில் இயக்குனராக பணியாற்றி வந்த நிலையில், தற்போது பாலக்காடு மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்றுள்ளார்.

Advertisement